Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சிக்கலில் இருக்கும் சிஎஸ்கே” மெகா ஏலத்தால் குழப்பத்தில் தோனி.. ஒரே ஒரு திட்டம் தான் பலன் தரும்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் முக்கிய சிக்கலை நீக்குவதற்காக தோனி வியூகம் அமைத்து கொடுத்துள்ளார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் கலந்துக்கொள்ளும் வீரர்களின் இறுதிப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 1,214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் இருந்து 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

அடிப்படை தொகை

அடிப்படை தொகை

இந்த மெகா ஏலத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச அடிப்படை தொகையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 590 வீரர்களில் 48 வீரர்கள் ரூ. 2 கோடி என்ற அடிப்படை தொகையை கொண்டுள்ளனர். 20 வீரர்கள் ரூ.1.5 கோடி என்ற பிரிவிலும், 34 வீரர்கள் ஒரு கோடி என்ற பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து வீரர்களும் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என்ற அடிப்படை தொகையை கொண்டுள்ளனர்.

குழம்பும் சிஎஸ்கே

குழம்பும் சிஎஸ்கே

இதில் இருந்து வீரர்களை தேர்வு செய்வதில் தான் சென்னை அணிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ஏற்கனவே தோனி, மெயின் அலி, ஜடேஜா, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீதம் ரூ.48 கோடியை தன்வசம் வைத்துள்ளது. இந்த தொகையை வைத்து அந்த அணி 21 உள்நாட்டு வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்கள் வரையும் ஏலம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங் வீரர்

ஓப்பனிங் வீரர்

சென்னை அணிக்கு ஓப்பனிங்கில் ஒருபுறம் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் உள்ள நிலையில், மற்றொரு ஓப்பனராக சீனியர் வீரர் தேவைப்படுகிறார். எனவே அந்த அணி டூப்ளசிஸ், டேவிட் வார்னர், டிகாக் போன்ற வீரர்களை வாங்க குறிவைத்துள்ளது. எனினும் அவர்களுக்கு மெகா ஏலத்தில் அதிக போட்டிகள் நிலவுவதால், எப்படியும் ரூ.10 கோடி வரையாவது செலவாகக்கூடும்.

பவுலிங் தேவை

பவுலிங் தேவை

சிஎஸ்கே அணி ஒரு வேகப்பந்துவீச்சாளரை கூட தக்கவைக்கவில்லை. எனவே அந்த அணி குறைந்தது 4 உலக தரம் வாய்ந்த பவுலர்களை பக்க பலமாய் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது ரபாடா, ட்ரெண்ட் போல்ட், கம்மின்ஸ், ஹாசல்வுட், ஆர்ச்சர் போன்ற வீரர்களை குறிவைத்துள்ளது. இவர்களுக்கு கடும் போட்டி இருக்கும் என்பதால் குறைந்தது ரூ.10 கோடிக்கு மேல் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்களுக்கு கூடிய மதிப்பு

இளம் வீரர்களுக்கு கூடிய மதிப்பு

இதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் வீரர்களான தீபக் சஹார், ஷாருக்கான், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ஹர்ஷல் படேல் உள்ளிட்டோரின் மதிப்பும் தற்போது பல மடங்கு எகிறிவிட்டன. எனவே சிஎஸ்கே அணி ப்ளேயிங் 11ல் முன்னணி வீரர்களை வைத்து பூர்த்தி செய்யவே சராசரியாக ரூ.35 கோடி வரை செலவாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஒரு அணி குறைந்தது 20 வீரர்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய தேவைகள் உள்ளன. எனவே மீதமுள்ள ரூ.13 கோடியில் 10க்கும் மேற்பட்ட பேக் அப் வீரர்களை சிஎஸ்கே எடுத்தாக வேண்டும். அதுவும் சிஎஸ்கேவின் எதிர்கால வீரர்களானவர்களாக இருக்க வேண்டும். இப்படிபட்ட சிக்கலான சூழலை சரிசெய்துக்கொடுக்க தோனியே மெகா ஏலத்திற்கு நேரில் செல்லவுள்ளார். விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி, U 19 உலகக்கோப்பையை பார்த்து ஏற்கனவே வீரர்களின் பட்டியலை தயார் செய்துவிட்ட தோனி, பணத்திற்கு ஏற்றவாறு அவர்களை ஏலம் கேட்கவுள்ளார்.

Story first published: Tuesday, February 1, 2022, 19:19 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+