CSK: மும்பை இந்தியன்ஸ்-இடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க 7 அணிகளுடன் முட்டி மோதும் சிஎஸ்கே!
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியில் இருந்து விலக உள்ளதாகத் கூறப்படும் நிலையில் அவரை தங்களது அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 7 ஐபிஎல் அணிகளுடன் மல்லுக்கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் விண்டோ மூலம் வாங்குவதற்கு மொத்தம் 7 ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 2 அணிகள் மட்டுமே ஹர்திக்கை வாங்கும் பந்தயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக், பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாகத் திரும்பினார். ஆனால், அவரது தலைமையின் கீழ் மும்பை அணி முறையே 10, 3 மற்றும் 9 ஆகிய இடங்களைப் பிடித்து ஏமாற்றமளித்தது.
பெங்களூருக்கு மாறிய ஹர்திக் பாண்டியா
இதற்கிடையில், 32 வயதான ஹர்திக் பாண்டியா தற்போது தசைநார் காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அவர் தனது கிரிக்கெட் பயிற்சியை மேம்படுத்த மும்பையில் இருந்து பெங்களூருக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ளார். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் இருந்து தினமும் பயிற்சிக்குச் செல்வது கடினமாக இருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் புதிய மையமான 'சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்' (சிஓஇ) அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர் என்பதால், காயம் மேலாண்மை முதல் திறன் பயிற்சி வரை அனைத்து வசதிகளையும் அவர் இங்கு இலவசமாகப் பெறலாம். இனிமேல் அவர் ஐபிஎல் மற்றும் தேசியப் போட்டிகளில் விளையாடாத நேரங்களில் அங்கேயே தங்கி தீவிரப் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பிசிசிஐ-யின் சிஓஇ-ஐ தனது நிரந்தரப் பயிற்சி மையமாக மாற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications
