Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: தலையில் துண்டை போட்ட சிஎஸ்கே.. எத்தனை பேருக்குதான் இன்னும் காயம் ஏற்படும்? தோனி முதல் ஆயுஷ் வரை

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய போது, அந்த அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே காயத்தால் மைதானத்திலேயே துடித்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனி முதல் சில முக்கிய வீரர்கள் காயத்தால் விலகி வரும் நிலையில், தற்போது இந்த 18 வயது வீரருக்கும் நேர்ந்துள்ள கதி சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரராகக் களம் புகுந்த 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 30 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இரண்டு ரன்களை எடுப்பதற்காக அவர் மின்னல் வேகத்தில் ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தசைப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது.

CSK Ayush Mhatre Injured During a match against SRH Growing Injury Crisis Troubles CSK in IPL 2026

ஓட முடியாமல்..!

காயத்தால் ஏற்பட்ட வலியால் மைதானத்திலேயே ஆயுஷ் சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். கடுமையான வலி இருந்தபோதிலும், அணியின் நலனுக்காக அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். சரியாக நடக்கக்கூட முடியாமல் விந்தி, விந்தி ஓடிய அவர், ஒரு ரன் அவுட் கண்டத்தில் இருந்தும் தப்பினார். இருப்பினும், காயத்தின் தீவிரத்தால் அவரால் தொடர்ந்து அதிரடி காட்ட முடியவில்லை. இறுதியில் 30 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு 'ஹாம்ஸ்ட்ரிங்' காயம் ஏற்பட்டுள்ளதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் காயங்கள்

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காயங்கள் விடாமல் துரத்தி வருகின்றன. ஏற்கனவே ஜாம்பவான் வீரர் மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தே விலகிவிட்டனர். அதிரடி வீரர் டிவால்ட் பிரெவிஸ் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு மீண்டு வந்த நிலையில், தற்போது ஃபார்மில் இருந்த ஆயுஷ் மத்ரேவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போட்டி நிலவரம்

முன்னதாக பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் தலா 59 ரன்கள் விளாசினர். சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் சிஎஸ்கே அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, April 18, 2026, 23:16 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+