Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவின் பயோபிக்..பாலிவுட் நடிகர்களுக்கு நோ.. அந்த தமிழ் நடிகர் தான் வேண்டும்..ஸ்ட்ரிக்ட் கண்டிசன்

மும்பை: இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வாழ்கை வரலாற்று படம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்களில் சுரேஷ் ரெய்னாவும் முக்கியமானவர்.

கிரிக்கெட்டை தாண்டி ரெய்னா - தோனி இருவரின் நட்பு குறித்து பெரியளவில் பேசப்பட்டு வந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக வேகமாக சரிந்த போதெல்லாம், தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி பல முறை காப்பாற்றியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தோனியின் மனநிலையை புரிந்துக்கொண்டு அவருக்கு ஏற்ற சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்க கூடியவர் ரெய்னாவே ஆகும். இந்நிலையில் இவரின் வாழ்க்கையை படமாக்க திட்டம் போடப்பட்டு வருகிறது.

வாழ்க்கை படம்

வாழ்க்கை படம்

சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, மேரி கோம் போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டு, அவை பெரிய வெற்றிகளை பெற்றது. சமீபத்தில் தமிழக வீரர் டி நடராஜனின் வாழ்கை வரலாற்றை கூட படமாக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரெய்னாவின் வரலாற்றைப் படமாக எடுக்க சில இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

யார் ஹீரோ

யார் ஹீரோ

சமீபத்தில் இதுகுறித்து சுரேஷ் ரெய்னாவிடம் உங்கள் வாழ்க்கை வரலாறு படத்தில் யாரை ஹீரோவாக போட்டால் நன்றாக இருக்கும்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரெய்னா நடிகர் சூர்யாதான் எனது கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர், தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக நிறைய உழைக்கிறார் எனத்தெரிவித்துள்ளார்.

 ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

வழக்கமாக விளையாட்டு வீரர்களின் வாழ்கை வரலாற்று படங்களில் பாலிவுட் பிரபலங்கள் தான் பெரும்பாலும் நடிப்பார்கள். ஆனால் சுரேஷ் ரெய்னாவோ, தனக்கு பாலிவுட் நடிகர்கள் வேண்டாம், தமிழ் நடிகர் தான் வேண்டும் எனக்கூறியிருப்பதை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Story first published: Saturday, June 26, 2021, 21:37 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+