Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவர்மெண்ட் வேலை மாதிரி நெனைச்சிக்கிட்டு இருக்காங்க.. சிஎஸ்கே வீரர்களை வாரிய ஷேவாக்

டெல்லி : சிஎஸ்கே வீரர்கள் அந்த வேலையை அரசு பணி போல நினைத்துக் கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கலாய்த்துள்ளார்.

அந்த அணியின் வீரர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கலாம் என்று கருதி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரர்களை ஷேவாக் கலாய்ப்பது இது முதல்முறையல்ல. சில வாரங்களுக்கு முன்னதாக, சிஎஸ்கே வீரர்கள் விளையாட வருவதற்கு முன்னதாக குளுக்கோஸ் எடுத்துக் கொண்டு வந்தால் நல்லது என்று அவர் கூறியிருந்தார்.

6ல் 2 போட்டிகளில் வெற்றி

6ல் 2 போட்டிகளில் வெற்றி

ஐபிஎல் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி 3 முறை கோப்பையை வென்றுள்ளது சிஎஸ்கே. ஆனால் இந்த முறை அந்த அணியின் முக்கிய வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், வெற்றிக்கான போராட்டம் அணியில் தொடர்கிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே.

திணறிய சிஎஸ்கே அணி

திணறிய சிஎஸ்கே அணி

கடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 168 ரன்களை இலக்காக அமைத்து தந்தனர் சிஎஸ்கே பௌலர்கள். ஆனால் அந்த இலக்கை அடைய முடியாமல் அணியின் வீரர்கள் தடுமாறினர். தோனி உள்பட அனைவருமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது போல மெதுவாக ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது சிஎஸ்கே.

கலாய்த்த ஷேவாக்

கலாய்த்த ஷேவாக்

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் அந்த அணியில் விளையாடுவதை அரசு வேலையில் இருப்பதை போல நினைப்பதாக முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கிண்டலடித்துள்ளார். அணியின் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் முக்கிய நேரத்தில் டாட் பந்துகளை அடித்து அணியை தோல்வியுற செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

குளுக்கோஸ் எடுக்க ஆலோசனை

குளுக்கோஸ் எடுக்க ஆலோசனை

சிஎஸ்கே வீரர்கள் அந்த வேலையை அரசு வேலையை போல நினைத்துக் கொண்டிருப்பதாகவும் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் வாங்கும் நினைப்பில் அவர்கள் உள்ளதாகவும் ஷேவாக் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே வீரர்களை ஷேவாக் கலாய்ப்பது இது முதல்முறையல்ல. சில வாரங்களுக்கு முன்பு விளையாட போவதற்கு முன்னதாக குளுக்கோஸ் எடுத்துக் கொண்டு செல்லுமாறு அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 9, 2020, 17:30 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+