For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு வழியா பணத்தை செலவு செய்த சிஎஸ்கே.. இளம் ஆல் ரவுண்டரை குறிவைத்து எடுத்த சென்னை

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர் ஒருவரை அதிக விலை கொடுத்து வாங்கியது.

ஏலத்தின் தொடக்கம் முதலே சிஎஸ்கே சீனியர் வீரர்களை குறிவைத்து, இளம் வீரர்களை கண்டுகொள்ளாமல் இருந்தது.

இதனால் கடுப்பான ரசிகர்கள், சென்னை அணியை இணைய தளத்தில் வெளுத்து வாங்கினர். இதனை படித்து இருப்பார்களோ என்னவோ, அதன் பின் பணத்தை சென்னை அணி எடுக்க தொடங்கியது.

ராக்கெட் வேகம்

ராக்கெட் வேகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சாஹர் பெயர் வந்ததும் அனைத்து அணிகளும் கடுமையாக மோதினர். குறிப்பாக ராஜஸ்தான் அணி தீபக் சாஹரை விட்டு கொடுப்பதாக இல்லை. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிஎஸ்கே, பின்னர் களத்தில் குதித்தது. இதனால் தீபக் சாஹரின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

14 கோடி

14 கோடி

இதன் மூலம் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியது. இதனையடுத்து சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபக் சாஹரை 2018ஆம் ஆண்டு சென்னை அணி 80 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது 14 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.

பலம்

பலம்

தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்ய கூடியவர். இதே போன்று பேட்டிங்கிலும் தற்போது அசத்தி வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளை தீபக் வென்று தருகிறார். இதனால் தான் அவரை சிஎஸ்கே விடவில்லை. இதனால் சிஎஸ்கே அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

சிஎஸ்கே எடுத்த வீரர்கள்

சிஎஸ்கே எடுத்த வீரர்கள்

தற்போது வரை சென்னை அணி பிராவோ, உத்தப்பா, தீபக் சாஹர் , அம்பத்தி ராயுடு ஆகியோரை வாங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை அணி, ஏற்கனவே தங்களுக்காக விளையாடிய வீரர்களையே குறிவைத்து எடுப்பது தெளிவாக தெரிகிறது. இது சென்னைக்கு கை கொடுக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, February 12, 2022, 19:04 [IST]
Other articles published on Feb 12, 2022
English summary
CSK Bought Deepak chahar for 14 crores in ipl mega auction ஒரு வழியா பணத்தை செலவு செய்த சிஎஸ்கே.. இளம் ஆல் ரவுண்டரை குறிவைத்து எடுத்த சென்னை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+