Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டி ஹர்திக் பாண்டியாவை அடிச்சி தூக்கிய சிஎஸ்கே..!! தோனிக்கு கிடைத்த செம ஆல்ரவுண்டர்

பெங்களூரு: ஐபிஎல் மெகா தொடரில் சென்னை அணி இளம் அதிரடி ஆல்ரவுண்டரை வாங்கி அசத்தியது.

அண்டர் 19 உலககோப்பையில் விளையாடியவர் ஆல் ரவுண்டர் ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர். வேகப்பந்துவீச்சாளரான அவர், பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடியவர்.

ஹங்கர்கேகரை குட்டி ஹர்திக் பாண்டியா என்று தான் ரசிகர்கள் அழைப்பார்கள்.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேக்கரை சிஎஸ்கே மற்றும் மும்பை அணி குறிவைத்துள்ளதாக நாம் ஒரு மாதத்திற்கு முன்பே கூறி இருந்தோம். அதே போல் ஹங்கர்கேகர் பெயர் வந்ததும், மும்பை அணி களத்தில் குதித்தது. இறுதியில் போட்டிக்கு வந்த சிஎஸ்கே ஹங்கர்கேகரை விடுவதாக இல்லை.

சென்னை எடுத்தது

சென்னை எடுத்தது

இதனையடுத்து ஹங்கர்கேகரை ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை அணி எடுத்தது. ஹங்கர்கேகர் பந்தை சிக்சருக்கு விரட்டுவதில் வல்லவர். இதே போன்று ஓபனிங் ஓவர் வீசும் வேகப்பந்துவீச்சாளர். இதனால் எதிர்காலத்திற்கு ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் சென்னை அணியின் தூணாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹங்கர்கேகர் செயல்பாடு

ஹங்கர்கேகர் செயல்பாடு

ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் போட்டியிலும் விளையாடியுள்ளார். வினோத் மான்காட் கோப்பையில் 8 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், 216 ரன்களையும் விளாசியுள்ளார். ஆசிய கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வாழ்க்கை

வாழ்க்கை

மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தான் இவரது ஹீரோவாம். தனது தந்தையை கோவிட் காரணமாக பறி கொடுத்தார் ராஜவர்தனே ஹங்கர்கேகர். எனினும் துவண்டு போகாமல் தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய ராஜவர்த்தன் தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு கீழ் விளையாட உள்ளார்.

Story first published: Sunday, February 13, 2022, 17:07 [IST]
Other articles published on Feb 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+