Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு கோபமோ.. தோனி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.. இந்திய அணியை மொத்தமாக புரட்டி எடுத்த வீரர்!

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பவுலர் ஜோஸ் ஹஸல்வுட் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி படுதோல்வி அடைந்தது.முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது.

முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.

மோசம்

மோசம்

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் இது மிக மோசமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இந்த போட்டியில் சொதப்பியதற்கு ஆஸ்திரேலிய அணியின் இரண்டு பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். ஒருவர் கும்மின்ஸ் மற்றும் இன்னொருவர் ஜோஸ் ஹஸல்வுட்.

ஜோஸ் ஹஸல்வுட்

ஜோஸ் ஹஸல்வுட்

இதில் ஜோஸ் ஹஸல்வுட் பவுலிங்தான் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. முதல் இன்னிங்ஸில் இவர் ஒரு விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இவர் 6 விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இவர் வெறும் 6 ஓவர் மட்டுமே போட்டு இருந்தாலும் கூட 6 விக்கெட் எடுத்தார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் இல்லாத நிலையில் மிக முக்கியமான பவுலராக ஜோஸ் ஹஸல்வுட் மாறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் புதிய சூறாவளியாக இவர் மாறியுள்ளார்.திடீர் யார்க்கர், அதி வேக பவுன்சர் என்று இவர் போடும் பவுலிங் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருந்தது.

 திணறல்

திணறல்

இவரின் பவுலிங்கில் கோலி, ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் என்று டாப் ஆர்டர் மொத்தமும் திணறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் இவர் களத்தில் மிகவும் கோபமாக ஆக்ரோஷமாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் ஜோஸ் ஹஸல்வுட் சிஎஸ்கே அணியில்தான் விளையாடினார். ஆனால் கேப்டன் தோனி இவரை ஒரே ஒரு போட்டியில்தான் பயன்படுத்தினார்.

 டெத் ஓவர்

டெத் ஓவர்

டெத் ஓவரில் பவுலிங் வீச வேண்டும் என்று தோனி இவரை அணியில் எடுத்தார். ஆனால் இவரை தோனி கடைசி வரை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் ஜோஸ் ஹஸல்வுட் தனது அசாத்திய திறமையை இந்தியாவிற்கு எதிரான தொடரில் நிரூபித்துள்ளார்.

Story first published: Monday, December 21, 2020, 17:41 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+