CSK: முகேஷ் சௌத்ரி விக்கெட் எடுத்த உடன் மறைந்த தாய்க்கு அர்ப்பணித்து கண்கலங்கி உருக்கம்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தாய் இறந்த துயரில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அதனைத் தன் தாய்க்கு அர்ப்பணித்தார்.
முகேஷ் சௌத்ரியின் தாய், ஓராண்டு கால நோய்க்குப் பிறகு கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காலமானார். சனிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு, தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவர் தனது சொந்த ஊரான ராஜஸ்தானின் பில்வாராவுக்குச் சென்றிருந்தார்.

இறுதிச் சடங்குகளை முடித்து, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டிக்கு முன்பாக அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினார். களத்தில் இறங்கியதும் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார். 208 ரன்கள் இலக்கை நோக்கி சேசிங் செய்த மும்பை இந்தியன்ஸின் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக்கை, தனது முதல் ஓவரிலேயே 7 ரன்களில் வெளியேற்றினார்.
விக்கெட் எடுத்த பிறகு, அதைத் தனது மறைந்த தாய்க்கு அர்ப்பணிக்கும் வகையில் வானத்தை நோக்கி கையசைத்தார் முகேஷ். இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் ரசிகர்கள் அவரது துணிச்சலையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டினர். "துயரத்திலும் சிஎஸ்கேக்காகப் பங்களிப்பது... கிரிக்கெட் உங்களை ஒவ்வொரு முறையும் பணிவுடன் வழிநடத்தும்," என்று ஒரு ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான வியாழக்கிழமை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முகேஷ் சௌத்ரியின் தாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்புப் பட்டை அணிந்திருந்தனர்.முகேஷ் சௌத்ரி 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டு கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications