Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் சூதாட்ட புகார்.. விளக்கம் கொடுத்துள்ள சிஎஸ்கே.. வீரர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: 2025 ஐபிஎல் தொடரின் போது புக்மேக்கர் ஒருவருக்கு பிளேயிங் 11 விவரங்களை சிஎஸ்கே வீரர் ஒருவர் சூதாகசியவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தனது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கவுள்ளது. ஊழல் விவகாரங்களில் தங்களுக்கு சகிப்புத்தன்மை கடைபிடிப்பதாகவும், இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெஹல்கா நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில், ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி மீது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதில், முன்னாள் ரஞ்சி கோப்பை வீரர் ரசித் பாட்டியா, புக்மேக்கர் வேடத்தில் இருந்த ஒரு ரகசிய நிருபரிடம் பேசும் போது, டெல்லியைச் சேர்ந்த சிஎஸ்கே வீரர் ஒருவர் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே அணியின் பிளேயிங் 11 விவரங்களை தம்மால் பெற முடிந்ததாகக் கூறியுள்ளார்.

CSK

இந்த அறிக்கையின்படி, 2025 ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளின் பிளேயிங் 11 விவரங்களை லண்டனைச் சேர்ந்த புக்மேக்கர்களுக்கு 'ஸ்னாப்சாட்' செயலி மூலம் அனுப்பி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக பாட்டியா தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களை வழங்கியதற்காக அவருக்கு ஒரு போட்டிக்கு தலா 60 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகீர் கான், தோனியின் பார்ட்னர்ஷிப் சிஎஸ்கே அணியை உயரத்திற்கு கொண்டு செல்லும்.. EX வீரர் பாராட்டு

ஜாகீர் கான், தோனியின் பார்ட்னர்ஷிப் சிஎஸ்கே அணியை உயரத்திற்கு கொண்டு செல்லும்.. EX வீரர் பாராட்டு

மேலும், 2026 சீசனிலும் அந்த வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்டால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 விவரங்களை முன்கூட்டியே பெற்றுத் தருவதாக பாட்டியா உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த வீரருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்தத் திட்டம் தடைபட்டதாகப் பின்னர் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிட்ட அந்த சிஎஸ்கே வீரரின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், பாட்டியா கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தவிர, டெல்லி பிரீமியர் லீக் போட்டிகளிலும் மேட்ச் ஃபிக்சிங் செய்ய பாட்டியா முன்வந்துள்ளார். அதே வீரரை மெதுவாக விளையாட வைக்கவோ அல்லது ரன் அவுட் செய்ய வைக்கவோ முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இந்தத் தகவல்கள் உறுதிபடுத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளது. எனினும்,

வன்ஷ் பேடி 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார். கணுக்கால் காயம் காரணமாக அவர் பாதி சீசனிலேயே விலகினார். பின்னர் 2026 சீசனில் அவர் அணியில் தக்கவைக்கப்படவில்லை, ஏலத்திலும் விற்கப்படாமல் போனார். சமூக ஊடகங்களில் சிலர் இவரை இந்தக் குற்றச்சாட்டுகளோடு ஒப்பிட்டுப் பேசி வந்தாலும், தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிஎஸ்கே பிளேயிங் லெவனை சூதாட்டக்காரர்களுக்கு நான் வெளியிட்டேன்னா? வணிஷ் பேடி மறுப்பு

Also Read

சிஎஸ்கே பிளேயிங் லெவனை சூதாட்டக்காரர்களுக்கு நான் வெளியிட்டேன்னா? வணிஷ் பேடி மறுப்பு

இதற்கு முன்பாக, சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வரலாறும் உள்ளது. 2013 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கியப் பொறுப்பில் இருந்த குருநாத் மெய்யப்பன் பந்தயத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 2016 மற்றும் 2017 ஆகிய இரு சீசன்களில் விளையாட அந்த அணிக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 23, 2026, 6:30 [IST]
Other articles published on Sep 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+