Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த டெஸ்ட்டுலயும் நெகட்டிவ்... களமிறங்கும் சிஎஸ்கே சிங்கங்கள்... விசில் போட தயாராகும் ரசிகர்கள்

துபாய் : ஐபிஎல் 2020 போட்டிகளுக்காக கடந்த 21ம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Recommended Video

CSK team have been tested Corona Negative | Oneindia Tamil

இதையடுத்து சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி முகாம் தடை பட்டது. மற்ற அணியினர் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களுக்கு அடுத்தடுத்து எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதையடுத்து இன்று முதல் அவர்கள் தங்களது பயிற்சிகளை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதித்த சிஎஸ்கே வீரர்கள்

கொரோனா பாதித்த சிஎஸ்கே வீரர்கள்

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 20ம் தேதியையொட்டி 8 அணிகளும் யூஏஇக்கு தங்களது பயணங்களை துவங்கினர். சிஎஸ்கே அணியினரும் கடந்த 21ம் தேதி துபாய்க்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த சிஎஸ்கே வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அந்த அணியின் 2 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு பாசிட்டிவ் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயிற்சி

பாதிக்கப்பட்ட பயிற்சி

இதையடுத்து அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மற்ற வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்ற அணி வீரர்களுக்கு தொடர்ந்து இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

களமிறங்கும் சிங்கங்கள்

களமிறங்கும் சிங்கங்கள்

இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு பேசிய அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்றிலிருந்து சிஎஸ்கே வீரர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று எடுக்கப்பட்ட அடுத்த டெஸ்ட்டிலும் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதையடுத்து தற்போது அணியின் பயிற்சி முகாம் உறுதிப்பட்டுள்ளது.

மைதானங்களில் பயிற்சி

மைதானங்களில் பயிற்சி

கடந்த 21ம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே வீரர்கள் 10 நாட்களுக்கு மேலாகியும் தங்களது குவாரன்டைனை மட்டும் முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். ஏற்கனவே 5 மாதங்கள் கொரோனா காரணமாக முடங்கியிருந்த அவர்கள், துபாய் புறப்படுவதற்கு முன்னதாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் 6 நாட்களுக்கு பயிற்சி மேற்கொண்டனர். தற்போது மீண்டும் துபாயில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

Story first published: Friday, September 4, 2020, 7:43 [IST]
Other articles published on Sep 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+