என்னா மனுஷன்யா.. தமிழகத்திற்காக தீபக் சஹாரை புறக்கணித்த தோனி.. ஸ்பெஷல் அழைப்பு வீண்!
டெல்லி: தீபக் சஹார் விடுத்த ஸ்பெஷல் அழைப்பையும் புறகணித்துவிட்டு,தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலராகவும், இந்தியாவின் எதிர்காலமாகவும் பார்க்கப்படுபவர் தீபக் சஹார்.
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய தீபக் சஹாருக்கு, நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

தீபக் சஹாரின் திருமணம்
கடந்த 2021ம் ஆண்டு சிஎஸ்கே - பஞ்சாப் போட்டியில் தீபக் சஹார், தனது காதலில் ஜெயா பரத்வாஜிடம் காதலை வெளிப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. நேற்று ( ஜூன் 1 ) அவர்களுக்கு டெல்லி ஆக்ராவில் உள்ள ஜேபீ பேலஸ் என்ற பிரமாண்ட ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர்.

தோனிக்கு அழைப்பு
திருமணத்திற்கு எந்தவொரு வீரர்களையும் அழைக்காத தீபக் சஹார், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் சாக்ஷி தோனிக்கு மட்டும் திருமணத்திற்கே வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தோனி மீது கொண்டுள்ள பெரும் அன்பால், அவரின் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என விரும்பியுள்ளார். தோனிக்கும் சாஹரை மிகவும் பிடிக்கும்.

புறக்கணித்த எம்.எஸ்.தோனி
ஆனால் தோனி திருமணத்தை புறக்கணித்துவிட்டார். இதற்கு காரணம் தமிழகம் தான். நேற்று திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா, சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், கால்பந்து என பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாற்றுதிறனாளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் தோனி பங்கேற்பது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று பங்கேற்பு
எனினும் தீபக் சஹாரை இன்று நேரில் சந்திக்கிறார் தோனி. இன்று இரவு டெல்லியில் தீபக் சஹார் - ஜெயா பரத்வாஜ் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியுள்ளது. இதற்கு அனைத்து வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது தோனி குடும்பத்துடன் கலந்துக்கொள்வார் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications