Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ஆட்டம் ஸ்டார்ட்!! .. இந்த முறை பவுண்டரி ஸ்பெஷல்.. இணையத்தில் தீயாய் பரவு பயிற்சி வீடியோ!

ராஞ்சி: ஐபிஎல் தொடருக்காக எம்.எஸ்.தோனி தற்போது இருந்தே முன்னேற்பாடுகளை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

“பயிற்சியை தொடங்கினார் சிஎஸ்கே கேப்டன் தோனி”.. இந்த முறை பவுண்டரி ஸ்பெஷல்.. காரணம் என்ன - வீடியோ!

ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தனது முன்னணி வீரர்களை கழட்டிவிட்ட போதும் ஃபார்ம் அவுட்டானாலும் தோனி தான் மீண்டும் கேப்டன் என ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

தோனியின் கடமை

தோனியின் கடமை

சிஎஸ்கே தன் மீது வைத்த நம்பிக்கைக்காக கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கடமையையும் மீறி பல்வேறு விஷயங்களை செய்துக்கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும் என சென்னைக்கு வந்து திட்டம் போட்டுக்கொடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

முன்கூட்டியே பயிற்சி

முன்கூட்டியே பயிற்சி

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தற்போதே தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் வலைக்குள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுவும் இந்த முறை அதிரடிக்கு தயாராகாமல், முழுக்க முழுக்க தரையோடு பவுண்டரிகளுக்கு விரட்டும் ஷாட்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெரும் பிரச்சினை

பெரும் பிரச்சினை

ஏனென்றால் கடந்த சீசன்களில் தோனிக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது பவுண்டரிகள் தான். முன்பு போன்று அவரால் கட் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை குவிக்க முடியவில்லை. இன்சைட் எட்ஜ், அல்லது பேட்டில் எட்ஜாகி விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். எனவே அதனை சரிசெய்யவே இந்த முறை முன்கூட்டியே பயிற்சியை தொடங்கியுள்ளார்.

கடைசி ஐபிஎல் சீசன்

கடைசி ஐபிஎல் சீசன்

தோனிக்கு 2022ம் ஆண்டு தொடரே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம். சென்னையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என அவர் கூறியிருந்த நிலையில் இந்தியாவில் முழு போட்டியை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துவிட்டது. எனவே இந்தாண்டு ஒரு சிறப்பான ஆட்டத்தை காட்டிவிட்டு, தோனி விடைபெறலாம்.

Story first published: Monday, February 7, 2022, 18:28 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+