Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊரே திருவிழா மாதிரி கொண்டாடிட்டு இருக்கு.. இந்த மனுஷன பாருங்க.. தல தோனியின் க்யூட் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி நேற்று 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சமகால கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவாறு புகைப்படங்களை பகிர்ந்தும், கட் அவுட் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எம்எஸ் தோனி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தப் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் வீட்டின் முன் குவிந்தனர். இதனையறிந்த தோனி, தனது வீட்டில் மேல் வந்து ரசிகர்களுக்கு கைகளையாட்டி சென்றார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக ட்ரெண்டாகியது.

CSK Captain MS Dhoni celebrating his 42nd birthday with his pets

இதனிடையே எம்எஸ் தோனியின் பிறந்தநாள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், தோனியைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும் என்ற வகையில் இதனை சொல்கிறேன். அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி கொண்டிருக்கும் இந்த சூழலில், அதனை எளிதாக எந்த ஆரவாரமுமின்றி தோனி கடந்து செல்வார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஹர்ஷா போக்ளே என்ன பதிவிட்டுள்ளாரோ, அதனையே தோனியும் செய்திருக்கிறார். சாதாரண கேக்கை வெட்டி தனது செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை வெட்டி ஒவ்வொரு துண்டாக ஒவ்வொரு நாய்-க்கும் வீச, அந்த கேக்கை அனைத்து நாய்களும் சரியாக கேட்ச் பிடித்து சாப்பிடுகிறது.

அதே கேக்கில் தோனியும் சில துண்டுகளை வெட்டி டேஸ்ட் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த வீடியோவில் தோனியின் கால்களில் ஆபரேஷன் செய்யப்பட்டு முழுமையாக குணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இதனால் தோனி அடுத்த சீசனில் நிச்சயம் விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Saturday, July 8, 2023, 17:38 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+