Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கில்லி எகிறிருச்சு" சென்னையில் கால் பதித்த தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக சென்னை வந்திறங்கியுள்ளார்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 40 வயதை எட்டிவிட்ட தோனி, மைதானத்தில் எப்படி செயல்படுவார், அவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது.

கோப்பையுடன் தோனி?

கோப்பையுடன் தோனி?

அதைக் கடந்து கடைசியாக சென்னையின் நாயகனை ஒரு முறை களத்தில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் கடைசி முறை தோனி சிரிப்புடனும், கோப்பையுடனும் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று சென்னை அணியின் வீரர்களும் பேசி வருகின்றனர்.

கடைசி ஐபிஎல் தொடர்

கடைசி ஐபிஎல் தொடர்

ஏனென்றால் 2019ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் தோனி இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவலின் போது, சுதந்திர தினத்தின்று ஓய்வை அறிவித்தார். இருப்பினும் தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி வெளிப்படையாக அறிவித்தார்.

சென்னையில் தோனி

சென்னையில் தோனி

சரியான அணியையும் கட்டமைத்துள்ள தோனி, கடைசி முறையாக தனது ஆட்டத்தை களத்தில் காட்ட சென்னையில் களமிறங்கியுள்ளார். சென்னை அணியின் பயிற்சி முகாம் தொடங்கியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். ஏற்கனவே ராயுடு, தீபக் சஹார், ரஹானே ஆகியோர் சென்னையில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களோடு இளம் வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 ரசிகர்களுக்கு அனுமதி?

ரசிகர்களுக்கு அனுமதி?

இந்த சூழலில் கேப்டன் தோனியின் பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த முறை சென்னையில் தோனி பயிற்சி மேற்கொண்ட போது, ரசிகர்கள் பயிற்சி ஆட்டத்தை காண்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் முன்னிலையில் தோனி பயிற்சிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, March 2, 2023, 21:30 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+