அஜித்தின் வழியில் ‘தல’ தோனி.. ட்ரோன்கள் மீது திடீர் ஆர்வம்.. விவசாயத்திற்காக செய்த பெரும் விஷயம்!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் பாணியில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்.
கிரிக்கெட்டை போலவே தொழிலதிபராகவும் தோனி கலக்கி வருகிறார். அவரின் முதலீடுகள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

தோனி முதலீடு
நிறைய லாபம் எடுக்கும் எண்ணத்தில் யோசித்த தோனி, ஆடை நிறுவனம், மதுபானம், விவசாயம், சினிமா துறை என பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் நிறைய முன்னணி நிறுவனங்களில் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.

ட்ரோனி அறிமுகம்
இந்நிலையில், தான் முதலீடு செய்துள்ள ட்ரோன் நிறுவனத்திற்காக புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் பெரும் பணத்தை தோனி முதலீடு செய்துள்ளார். விவசாயத்திற்காக இந்நிறுவனம் தயாரித்துள்ள 'ட்ரோனி 'என்ற ட்ரோனை தோனி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஸ்பெஷல் வசதிகள்
பயிற்கள் தூவுவது, பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது போன்ற பணிகளை செய்வதற்காக குறைந்த விலையில் இந்த ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மற்ற ஸ்பெஷல் வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனை இந்தியாவில் தோனி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு நிறைய உதவியாக இருக்கும் என பரிந்துரைத்துள்ளார்.

இந்த முதலீடு ஏன்?
இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்களை தயார் செய்யும் நிறுவனங்களில் கருடாவும் முக்கியமான ஒன்று. தோனி ஏற்கனவே விவசாயம் செய்துவரும் சூழலில், இனி நாடு முழுக்க விவசாயத்திற்கு ட்ரோன்கள் தான் உதவும் என்ற கணிப்பில் பணத்தை போட்டுள்ளார். இந்த நிறுவனம் குறித்து எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரில் கவுரப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications