Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவர்பிளேவில் தவறு செய்துவிட்டோம்.. நிதர்சனத்தை ஓப்பு கொள்ளுங்கள்.. சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுரை

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் எதிராக தொடர்ந்து நான்காவது போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி ராஜஸ்தான் அணி சராசரியை விட இலக்கை அதிகமாக நிர்ணயித்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் முதல் ஆறு ஓவரின் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம்.

CSK Captain MS Dhoni speech about reason for the loss vs rr

இதேபோன்று ஆடுகளமும் ராஜஸ்தான் பேட்டிங் செய்யும்போது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் ரன்கள் நிறைய கிடைத்தது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் நடு ஓவர்களில் நன்றாக தான் பந்து வீசினார்கள். ஆனால் எஜ் ஆகி ஐந்து முதல் ஆறு பவுண்டரிகள் சென்றுவிட்டது. அது இந்த ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாங்கள் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடிருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் பேட்டிங்கில் அமையவில்லை. இலங்கை வீரர் பதிரானா, இந்த ஆட்டத்திலும் நன்றாகத் தான் பந்து வீசினார். சில சமயம் நாம் எப்படி பந்து வீசினோம் என்பதை ஸ்கோர் கார்டு சரியாக சொல்லாது .

இதேபோன்று ராஜஸ்தானி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் விளையாடியது பாராட்டத்தக்கது. நாம் ரிஸ்க் எடுக்கும் போது கணக்கிட்டு எடுக்க வேண்டும். சரியான பந்தை தேர்ந்தெடுத்து சிக்ஸர்களுக்கு அடிக்க வேண்டும். முதல் ஆறு ஓவர்களில் எங்களுக்கு குறைந்த அளவிலே பௌண்டரிகள் சென்றது. நிதர்சனத்தை நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும் .அடுத்த ஆட்டத்தில் நாம் என்ன குறைகளை செய்தோமோ அதை முன்னேற்றம் செய்ய வேண்டும்.

ராஜஸ்தான் அணியின் முதல் 6 ஓவர் தான் இந்த ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிடித்த மைதானம் ஆகும். நான் முதல் சதத்தை விசாகப்பட்டினத்தில் அடித்தேன். அதன்மூலம் எனக்கு 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்ப்பூரில் தான் 183 ரன்கள் விளாசினேன். அது எனக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 27, 2023, 23:55 [IST]
Other articles published on Apr 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+