Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 ஐபிஎல் சீசன்.. வெறித்தனமாய் தயாராகும் தோனி.. திடீரென வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!

ராஞ்சி: ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி, ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அதுமட்டுமல்லாமல் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.

CSK Captain MS Dhoni walking after a gym session video is trending on social Media

இந்த சாதனைகளுக்கு பின்னால் சென்னை அணி கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளெம்மிங்குமே முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். இந்த சீசனில் தோனி காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடினார். இதனால் இறுதிப்போட்டிக்கு பின் உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன்பின் தோனிக்கு அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு நாட்களில் மருத்துவமனையில் இருந்த தோனி, பின் ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

இதன்பின் நீண்ட வாரங்களாக ஓய்வில் இருந்த தோனியின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் எம்எஸ் தோனி தயாரித்துள்ள "எம்ஜிஎம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தோனி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தது தெரிய வந்தது. இருப்பினும் தோனி 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் களமிறங்க வாய்ப்புள்ளதா என்பது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

CSK Captain MS Dhoni walking after a gym session video is trending on social Media

இந்த ஐபிஎல் சீசனின் முடிவில் ஓய்வை அறிவிக்காத தோனி, அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட முயற்சி எடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவரின் முயற்சிக்கு காலில் ஏற்பட்ட காயம் தடையாக அமைந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து விடுபட்டுள்ள தோனி, மீண்டும் தனது உடற்பயிற்சியை தொடங்கியுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியில் வரும் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், தோனி 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தின் போது தான் தோனி களமிறங்குவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

Story first published: Wednesday, July 26, 2023, 10:15 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+