மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு புதிய பொறுப்பு ஒன்றை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. இந்திய அணியில் மிகப்பெரிய ஸ்டார் வீரராக உருவாவார் என ருதுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகவும் அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் ருதுராஜ் தொடர்ந்து முக்கிய நேரத்தில் காயம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர் பல போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனினும் அதையும் மீறி சில போட்டிகளில் அவர் சிறப்பாக சம்பவங்களை செய்து இருக்கிறார்.

குறிப்பாக துலிப் கோப்பை தொடரில் அவர் அபார சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் ருதுராஜ், இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ருதுராஜ் பெயர் இல்லை என்றாலும் முதல் படியை ருதுராஜ் தொட்டுவிட்டார் என்று சொல்ல வேண்டும்.
தற்போது இராணி கோப்பை தொடர் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இதில் கடந்த ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற விதர்பா அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இதில் இதர இந்திய அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் சேர்க்கப்பட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கேப்டனாக ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் அன்சூல் காம்போஜ், ஆகாஷ் தீப் போன்ற வீரர்களுக்கும் இரானி தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிஎஸ்கே வீரர், ஷேக் ரசித் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிஷன் மனு சுடாவ் போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்திய இதர அணி (இரானி கோப்பை): ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷ் துல், ஷேக் ரஷீத், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கோட்டியன், மனவ் சுதர், குர்னூர் ப்ரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், சரன்ஷ் ஜெயின்