Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கண்ணு.. 'சிங்கக் குட்டி'யை பக்கத்தில் வைத்துக் கொண்டு 'சைன்' போட்ட 'தல'! #WhistlePodu

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள டோணி, தனது மகள் ஜிவாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளன. 2 ஆண்டு தடை முடிந்து இவை திரும்பியுள்ளன.

இந்த நிலையில் இன்று இந்த அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியானது. அதில் டோணியும் ஒருவர் ஆவார். இதையடுத்து டோணி ரசிகர்கள் உற்சாக மூடுக்கு மாறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அது வைரலாகியுள்ளது.

மகளை வைத்துக் கொண்டு கையெழுத்து

மகளை வைத்துக் கொண்டு கையெழுத்து

இந்த வீடியோவில் டோணி, அணிக்குத் திரும்புவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். அப்போது அவரது மகள் ஜிவா அருகில் நின்று கொண்டிருக்கிறார். பேனாவை எடுத்து விளையாடியபடி இருக்கிறது இந்த குட்டிப் பாப்பா.

பெரிய விசில் அடிங்க

வீடியோவின் முடிவில் திரும்பி வந்துட்டோம்னு சொல்லு. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என்ற வாசகமும், கோஷமும் வந்து வீடியோ முடிகிறது. கூடவே தகிட தகிட தகிட தல என்ற ஹேஷ் டேக் வேறு அதகளப்படுகிறது.

சென்னை ரசிகர்கள் குஷி

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர். இவர் பாட்டாகவே பாடி விட்டார் பாருங்க.

தலையெழுத்து மாறப் போகுது

Ipl oda தலைஎழுத்து நம்ம தல போட்ட கையெழுத்துல மாற போகுது. நீ வா தல!

இது அதுல்ல!

யா என் பேரு மாணிக்கம் , எனக்கு இன்னொரு பேரு இருக்கு .. .

தலைவன் பேக் டூ ஃபோர்ட்

இது ஜடேஜா

இது ரவீந்திர ஜடேஜா கையெழுத்திடும் காட்சி. மீசைய முறுக்கு!

ரெய்னாவும் வருகிறார்

இது சுரேஷ் ரெய்னாவின் கையெழுத்திடும் வீடியோ.

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, மகிழ்ச்சி, என்ன கண்ணு செளக்கியமா.. இதெல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டுள்ள சில வசன உற்சாக வாசகங்கள்.

Story first published: Thursday, January 4, 2018, 20:18 [IST]
Other articles published on Jan 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+