Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL மினி ஏலம் - சிஎஸ்கே வின் திட்டம் என்ன? வரும் சீசனில் கம்பேக் தருவோம்.. சிஇஓ காசி விஸ்வநாதன்

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் அனைவரின் கண்களும் நான்கு முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே மீதுதான் திரும்பி உள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை தான் பிடித்து படுதோல்வியை தழுவியது. மேலும் ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை தழுவியது .

இதனை தொடர்ந்து ஜடேஜா நீக்கப்பட்டு தோனி அந்த இடத்திற்கு திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணியில் கடந்த வருடம் ஒரே குழப்பமாக தான் இருந்தது ம்இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தோனி தனது கடைசி சீசனில் விளையாடுகிறார் என்பதால் வெற்றியுடன் அவரை அனுப்ப சிஎஸ்கே அணி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

திருப்திக்கரமாக இல்லை

திருப்திக்கரமாக இல்லை

மேலும் சிஎஸ்கே வின் தூணாக விளங்கிய ஆல் ரவுண்டர் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக பிராவோக்கு பதில் யார் சிஎஸ்கே வில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மினி ஏலம் குறித்து சிஎஸ்கே வின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு திருப்திகர ஆண்டாக அமையவில்லை.

செயல்முறை இருக்கிறது

செயல்முறை இருக்கிறது

கடந்த சீசனில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அந்த சீசன் முடிந்த உடனே மினி ஏலத்திற்காக தான் காத்திருந்தோம். ஐபிஎல் மினி ஏலத்தில் நாங்கள் எப்படி செயல்படுவோம் என்பது குறித்து ஒரு செயல்முறை வைத்திருக்கிறோம்.அதை தான் இந்த மினி ஏலத்திலும் செய்ய இருக்கிறோம். மினி ஏலத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இந்த மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில் இரண்டு மாதிரி ஏழைகளை நடத்தி இருக்கிறோம். எந்த வீரரை எடுக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் ஆலோசனை நடத்திருக்கிறோம். ஐபிஎல் மினி ஏலத்திற்காக நாங்கள் தயாரான விதம் திருப்தியாக இருக்கிறது. பிராவோவை நாங்கள் விடுவித்து இருப்பதால் அவருக்கு மாற்று வீரரை மினி ஏலத்தில் எடுக்க வேண்டும்.

கூடுதல் வீரர்கள் தேவை

கூடுதல் வீரர்கள் தேவை

மேலும் இறுதிக்கட்ட ஓவர்களை வீசக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளரை அணியில் தேர்வு செய்ய வேண்டும். மற்ற இடங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. சில கூடுதல் வீரர்களை தேர்வு செய்து பலத்தை மேலும் அதிகரிக்க உள்ளோம். இம்பேக்ட் பிளேயர் விதி இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகவும் சில வீரர்களை தயார்படுத்த உள்ளோம். இந்த புதிய விதியால் வரும் சீசன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக ஒரு வீரர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான்

மேலும் வரும் சீசனில் சென்னையில் போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு மிகவும் பிடித்த மைதானமாக சேப்பாக்கம் விளங்குகிறது. அதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். சென்னையில் எப்போதுமே நமது அணி சிறப்பாகவே விளையாடி இருக்கிறது.வரும் சீசன் நிச்சயமாக சென்னை அணிக்கு நல்லதாக அமையும். தலைவன் இருக்கின்றார், தோனி கேப்டனாக செயல்பட உள்ளார். ஜடேஜாவும் இருக்கிறார். இதனால் 2018 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு போல் சிஎஸ்கே இம்முறையும் ஒரு கம் பேக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

Story first published: Friday, December 23, 2022, 13:18 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+