சிஎஸ்கே-வில் ஹர்திக் பாண்டியாவா? என்ன இதெல்லாம்.. முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே சிஇஓ.. என்ன சொன்னார்?
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி டிரேடிங் விண்டோ மூலம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிலும் ஏழு ஐபிஎல் அணிகளுடன் சிஎஸ்கே அணி போட்டி போட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்க முட்டி மோதுவதாக வெளியான தகவல்களை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனால், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அதற்கு நேர்மாறான விஷயத்தை கூறி இருக்கிறார்.
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு விலக உள்ளதாகவும், அவரை வாங்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, சிஎஸ்கே அவரை ஐபிஎல் 2027 சீசனுக்காக வாங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், "ஹர்திக் பாண்டியா குறித்து நாங்கள் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்எல்சி தொடர் முடிந்த பிறகு, சிஎஸ்கே அணியின் சீசன் மதிப்பாய்வு கூட்டம் நடைபெறும். அதற்குப் பிறகுதான் வீரர்களின் டிரேடிங் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி தொடரில் சிஎஸ்கே அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வைத்துள்ளதால், அதன் நிர்வாகத்தினர் தற்போது அமெரிக்காவில் உள்ளனர். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தங்களது கேப்டனின் டிரேடிங் குறித்து உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ மறுத்துவிட்டனர். தற்போதைக்கு வீரர்களின் டிரேடிங் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், சீசன் மதிப்பாய்வு முடிந்த பிறகே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மும்பை அணி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் ஹர்திக்கை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது.
ஐபிஎல் 2026 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி வெறும் 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தது. கடந்த 2025 சீசனில் மும்பை அணி 3-வது இடத்தை பிடித்திருந்தாலும், ஹர்திக்கின் தலைமையின் கீழ் அந்த அணி கடந்த 3 சீசன்களில் ஒரு முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால் ஹர்திக்கின் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
