Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிஎஸ்கே அணியின் முழு ஐபிஎல் போட்டி அட்டவணை.. சேப்பாக்கத்தில் எத்தனை போட்டிகள் நடைபெறும்?

மும்பை: 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அதிக ரசிகர்களை கொண்ட அணியான சிஎஸ்கே விளையாடும் 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள் மற்றும் மைதானங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

CSK Chennai Super Kings Full Schedule Out CSK to play 7 matches at chennai chepauk stadium

தோனியின் வழிகாட்டுதலுடன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் லீக் போட்டியில் மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு தனது பயணத்தை தொடங்குகிறது. சிஎஸ்கே விளையாடும் மொத்தம் 14 போட்டிகளில் 7 போட்டிகள் உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கத்திலும், மீதமுள்ள 7 போட்டிகள் வெளியூரிலும் நடைபெற உள்ளன. இதில் 2 போட்டிகள் மட்டும் பகல் ஆட்டமாக பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகின்றன. மற்ற அனைத்து போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளன.

சிஎஸ்கே அணியின் 2026 ஐபிஎல் லீக் போட்டிகள் முழு அட்டவணை:

மார்ச் 30 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுகாத்தி
ஏப்ரல் 3 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
ஏப்ரல் 5 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 11 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - சென்னை
ஏப்ரல் 14 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை
ஏப்ரல் 18 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 23 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 26 - 3:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்
மே 2 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை
மே 5 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி
மே 10 - 3:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை
மே 15 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ
மே 18 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை
மே 21 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - சென்னை

Story first published: Thursday, March 26, 2026, 19:17 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+