Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK:ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு..முன்னாள் MI வேகப்பந்துவீச்சாளரை வாங்கிய சிஎஸ்கே

மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் சிஎஸ்கே அணியில் எஞ்சிய போட்டிகளுக்கு காயம் காரணமாக விலகிய ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக ஆகாஷ் மாத்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர், சென்னை அணியின் பந்துவீச்சு பகுதிக்கு வலு சேர்க்கிறார்.

சிஎஸ்கே அணி ஏப்ரல் 18 சனிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் 2026 போட்டியில் ஆயுஷ் மகாத்ரேவுக்கு ஏற்பட்ட தொடைப்பகுதி காயம், அவருக்குப் பின்னடைவாக அமைந்தது. இதன் காரணமாக, ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை அன்று அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை என அணி நிர்வாகம் உறுதி செய்தது.

ஆகாஷ் மாத்வால் சென்னை அணியில் இணைந்ததை, சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வியாழன், ஏப்ரல் 23 அன்று மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டிக்கு முன்னதாக உறுதிப்படுத்தியது. இதையொட்டி, சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வேகப்பந்து வீச்சு வருகிறது!! ஆகாஷ் மாத்வால் இப்போது #Yellove. ஆயுஷ் மகாத்ரேவின் தொடை காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக ஆகாஷ் மாத்வால் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டது.

ஐபிஎல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகாஷ் மாத்வாலை ₹30 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதான மாத்வால், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடினார். 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்த அவர், ஐபிஎல் 2026 ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய இரண்டு சீசன்களில் மொத்தம் 13 போட்டிகளில் களமிறங்கிய மாத்வால், எதிரணிக்கு 19 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவரது பந்துவீச்சு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடி நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், ரூர்க்கியைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர், இதுவரை ஆடிய 56 டி20 போட்டிகளில் மொத்தம் 61 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

18 வயதே ஆன இளம் வீரரான ஆயுஷ் மகாத்ரே, நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் ஆறு போட்டிகளில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அசத்தினார். அவர் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 201 ரன்களைக் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

ஆயுஷ் மாத்ரேவின் காயம் காரணமாக ஏற்பட்ட இந்த இழப்பில், கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் அறிமுகமான உர்வில் படேல், சென்னை அணியின் வரவிருக்கும் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, April 23, 2026, 16:37 [IST]
Other articles published on Apr 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+