Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: பரம எதிரி அணியை முந்திய சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஒரு அடி முன்னேற்றம்.. பிளே ஆஃப் போகுமா?

சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் தனது பரம எதிரியான மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 22-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 48 ரன்களும், டிவால்ட் பிரெவிஸ் 41 ரன்களும் சேர்த்தனர். குறிப்பாக இளம் வீரர் ஆயுஷ் மதுர 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அசத்தினார்.

CSK Climbs to 8th Spot in IPL 2026 Points Table After Dominant 32-Run Victory Over KKR

பின்னர் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, சிஎஸ்கே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மும்பையை முந்தியது சிஎஸ்கே

இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் 2 புள்ளிகளுடன் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஹைதராபாத், டெல்லி, குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே தற்போது 8-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி:

அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி ரேஸில், சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன் 185 ரன்களுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 224 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான ஊதா நிற தொப்பி ரேஸில், சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் 10 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 10 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்ததாக நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Story first published: Wednesday, April 15, 2026, 0:57 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+