Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை கோச் பிளமிங்கின் முகத்தில் கேக்கை பூசிய வீரர்கள்.. வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

Recommended Video

IPL 2019: வைரலாகும் பிளமிங்கின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் 46வது பிறந்த நாள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது தொடர்பான வெற்றி கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை என்று சொல்லலாம்.

 Csk coach fleming birthday party celebration video goes viral

வெற்றிக்கு பின்னர் ஓய்வு அறைக்கு சென்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் 46 வது பிறந்த நாளை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினர். முகத்தில் கேக் பூசி, பாட்டு பாடி உற்சாகமாகினர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடைபெற்றது. ஆட்டத்தின் முடிவையே அந்த சம்பவம் தான் மாற்றியது எனலாம். 6வது ஓவரிலேயே தோனி அவுட்டாகி இருக்க வேண்டியது என்பது போட்டியை பார்க்காத பலருக்கும் தெரியாது. போட்டியை டிவியில் பார்த்தவர்கள் கூட அதை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.

முன்னதாக 8 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் சீசனில், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. புள்ளிகளில் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.

Story first published: Tuesday, April 2, 2019, 13:34 [IST]
Other articles published on Apr 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+