For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே ரெக்கார்ட் அப்படி பாஸ்! இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறாரா ஸ்டீபன் பிளமிங்.. பிசிசிஐ யோசனை?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கோச்சாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Recommended Video

New Coach | ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்- வீடியோ

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கோச்சாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார். இதுதான் தற்போது கிரிக்கெட் உலகில் அதிக வைரலாகி உள்ள கேள்வி.

இந்திய கிரிக்கெட் உலகின் முக்கிய பதவியான தலைமை பயிற்சியாளர் பதவியை பெற போவது யார் என்று கடும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.

தற்போது யார்

தற்போது யார்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக தற்போது பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கி உள்ளது.

விண்ணப்பம்

விண்ணப்பம்

இதற்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் உலகில் கொடி கட்டி பறந்த சில முன்னாள் வீரர்கள் இந்த பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த மாதம் இறுதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

யார் தேர்வு

யார் தேர்வு

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விண்ணப்பிக்க இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. இவர் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 2009ல் இருந்து இவர் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

சூப்பர்

சூப்பர்

இவரின் பயிற்சிக்கு கீழ் மொக்கையான பார்ம் அவுட் வீரர்களை வைத்துக் கொண்டு கூட சென்னை அணி கோப்பை அடித்துள்ளது. மொத்தம் மூன்று முறை சென்னை அணி இவரின் பயிற்சிக்கு கீழ் கோப்பை வென்றுள்ளது. இவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தேசிய அளவில் தகுதி பெற்ற சில அணிகளுக்கு வெற்றிகரமாக கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இவர் ஓய்விற்கு பின் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சிகளை செய்து வருகிறார். பிசிசிஐ அதிகாரிகளுடன் இவருக்கு இருக்கும் நெருக்கம் காரணமாக பெரும்பாலும் இந்திய அணிக்கு எப்போது வேண்டுமானாலும் இவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, July 18, 2019, 16:05 [IST]
Other articles published on Jul 18, 2019
English summary
CSK coach Stephen Fleming may be the next team India head coach.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+