Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையில காசு குறைவா இருந்துச்சி... காத்திருந்து பிடிச்சோம் - சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் 14.60 கோடி ரூபாய் என்ற குறைவான தொகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்றதாக அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

குறைவான தொகையுடன் சிஎஸ்கே ஏலத்தில் பங்கேற்றதால் மற்ற அணிகளின் வீரர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியதாக இருந்தது என்றும் சிறந்த வீரர்களுக்காக காத்திருந்து ஏலத்தில் எடுத்ததாகவும் பிளமிங் தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கும் சாம் குரானை 5.50 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

ரூ.14.60 கோடியுடன் களமிறங்கிய சிஎஸ்கே

ரூ.14.60 கோடியுடன் களமிறங்கிய சிஎஸ்கே

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தை 14.60 கோடி ரூபாயுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இதையடுத்து குறைந்தபட்ச தொகையாக அதை, பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டது.

சாம் குரான் ரூ.5.50க்கு ஏலம்

சாம் குரான் ரூ.5.50க்கு ஏலம்

நேற்றைய ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை 6.70 கோடி ரூபாய்க்கும் சாம் குரானை 5.50 கோடி ரூபாய்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்

சிஎஸ்கேவிடம் குறைந்தபட்ச அளவான ரூ.14.60 கோடி ரூபாய் மட்டுமே இருந்ததால், ஏலத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று பிளமிங்தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சிறந்த வீரர்களுக்காக காத்திருப்பு

சிறந்த வீரர்களுக்காக காத்திருப்பு

கைவசம் குறைவான தொகை இருந்ததால், சிறந்த வீரர்களுக்காக ஏலத்தில் சிஎஸ்கே காத்திருந்ததாகவும் மற்ற அணிகளின் தேவைகளுக்கேற்ப செயல்பட்டதாகவும் பிளமிங் மேலும் குறிப்பிட்டார்.

சாவ்லா உள்ளிட்ட பௌலர்கள்

சாவ்லா உள்ளிட்ட பௌலர்கள்

இந்த ஏலத்தில் பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹாசல்வுட், சாய் கிஷோர் மற்றும் சான் குரான் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளதன்மூலம் தனது பௌலிங் பக்கத்தை சிஎஸ்கே பலப்படுத்தியுள்ளது.

பிளமிங் நம்பிக்கை

பிளமிங் நம்பிக்கை

அணியின் புது வரவு சாம் குரான் தனது பேட்டிங்கின் மூலம் அணிக்கு சிறந்த பலத்தை அளிப்பார் என்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டும்

இன்னும் சிலவற்றை சேர்க்க வேண்டும்

மிடில் ஆர்டருக்கு குரான் மற்றும் பிராவோ போன்ற வீரர்கள் உள்ள நிலையில், தற்போது பாதுகாப்பாக உணர்வதாக பிளமிங் மேலும் தெரிவத்தார். இன்னும் சில விஷயங்களை அணியில் சேர்ப்பதன்மூலம் ஐபிஎல் தொடரை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Friday, December 20, 2019, 15:04 [IST]
Other articles published on Dec 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+