For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சி.எஸ்.கே.வின் பெரிய 'தல'

By Siva

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தமிழக மக்களுக்கு ட்விட்டர் மூலம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 8வது சீசன் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் டோணி தலைமையிலான சென்னை அணி வென்றது.

இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி பெற்றுள்ளதால் அணி வீரர்கள் மட்டும் அல்ல பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான பிளெமிங் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் Puthandu Vazthukal என்று வாழ்த்தி அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

Story first published: Tuesday, April 14, 2015, 10:51 [IST]
Other articles published on Apr 14, 2015
English summary
Chennai Super Kings team coach Stephen Fleming tweeted that, 'Wishing everyone a very Happy Tamil New Year. Puthandu Vazthukal Wishes.'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+