Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து பட்டையைக் கிளப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK Team Players
சென்னை : நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் ஏற்பட்ட 3 சறுக்கல்களை சமாளித்து தற்போது தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.

அந்த அணியின் பேட்ஸ்மென்களும் சரி, பந்து வீச்சாளர்களும் சரி நல்ல பார்முக்குத் திரும்பியுள்ளனர். இதனால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது சென்னை.

அதிலும் கடந்த 5 போட்டிகளையும் சென்னை அணி தோல்வியே இல்லாமல் வென்றுள்ளது. அத்தனையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த தனது சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணியை 147 ரன்களுக்கு நிறுத்தியது சென்னை அணி. ஜகாதி அபாரமாக பந்து வீசி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அல்பி மோர்க்கல் தன் பங்குக்கு 2 விக்கெட்களை சாய்க்க, அஸ்வின் ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

பின்னர் விளையாடிய சென்னை அணிக்கு மைக் ஹஸ்ஸியின் அட்டகாசமான ஆட்டம் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. முரளி விஜய் 5 ரன்களில் வீழ்ந்தாலும் கூட, ஹஸ்ஸியும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்து வெற்றி தேடித் தந்தனர். ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 79 ரன்களைக் குவித்தார். ரெய்னா 61 ரன்களை எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தற்போது 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளை சந்தித்து அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இன்னும் சென்னைக்கு 5 போட்டிகள் உள்ளன. எனவே அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது பிரகாசமாக உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+