Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிஎஸ்கே-வுக்கு அடுத்த பேரிடி.. 2026 ஐபிஎல் தொடரில் இருந்தே ஆல்-ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் நீக்கம்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு காயங்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. ஏற்கனவே பல முக்கிய நட்சத்திர வீரர்களை இழந்து தவிக்கும் சிஎஸ்கே-வுக்கு, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு நடுவே ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆன ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் இருந்தே முழுமையாக விலகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானவர் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஷ். தனது முதல் போட்டியிலேயே சிறப்பான பங்களிப்பை அளிக்க முயன்ற அவருக்கு, வலது காலில் பலமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 2026 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இந்தத் தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

CSK Debutant Ramakrishna Ghosh Ruled Out of IPL 2026 due to right leg fracture

இந்த சீசனில் சிஎஸ்கே அணியை 'காயங்களின் சாபம்' துரத்திக் கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொடர் தொடங்குவதற்கு முன்பே நாதன் எல்லிஸ் விலகினார். அவருக்குப் பதிலாக வந்த ஸ்பென்சர் ஜான்சனும் பாதி சீசன் விளையாடவில்லை. பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜுடன் இணைந்து மிரட்டிய கலீல் அகமது காயம் காரணமாக வெளியேறினார். அதேபோல், தொடக்க ஆட்டங்களில் அதிரடி காட்டிய 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவும் காயம் காரணமாக விலகியது அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது.

அனைத்திற்கும் மேலாக, கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'தல' தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சீசன் தொடக்கத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பில் இருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. அவர் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், இன்னும் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் சிஎஸ்கே-வுக்கு சில ஆறுதலான விஷயங்களும் உள்ளன. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். சஞ்சு சாம்சன் மற்றும் அறிமுக வீரர் கார்த்திக் சர்மா ஆகியோர் மும்பைக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை, சிஎஸ்கே இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் கொண்ட சிஎஸ்கே, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வந்து பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, May 3, 2026, 21:56 [IST]
Other articles published on May 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+