CSK: எனக்கு தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது..எங்கள் அணியில் பயம் அறியாத இளம் வீரர் இவர் தான்- பிரவீஸ்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் டேவால்ட் பிரேவிஸ், காயத்திலிருந்து மீண்டு வந்து களத்தில் இறங்கிய பிறகு வழக்கம் போல் பேட்டிங்கில் அதிரடி காட்டியுள்ளார். ஐந்து முறை சாம்பியன் சென்னை அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை நேற்று 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, மீண்டும் தன்னம்பிக்கையைப் பெற்றது. இளம் வீரர் ஆயுஷ் மகாத்ரேவின் பங்களிப்பை 'சிறப்பு வாய்ந்தது' என்றும் பிரேவிஸ் பாராட்டினார்.
காயம் காரணமாக முதல் சில ஆட்டங்களில் விளையாடாத டிவாவால்ட் பிரேவிஸ், அணிக்குத் திரும்பிய பின் வெற்றிக்குப் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். தனது கம்பேக் ஆட்டத்தில் களத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட முடிந்ததில் தனக்கு மீண்டும் தன்னம்பிக்கை கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய அவர், “இது வேடிக்கையாக இருந்தது. நான் இதை ரசித்தேன். ரசிகர்களுக்கு முன்னால் களத்தில் இறங்கியது மிகச் சிறப்பு. விக்கெட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள நேரம் செலவிட்டது சிறப்பாக இருந்தது. கடந்த இரவை விட இது சற்று வித்தியாசமானது, ஆனால் நிறைய வேடிக்கையாக இருந்தது” என பிரேவிஸ் கூறினார்.
“களத்தில் சுற்றித் திரிந்து டைவ் அடித்தது மற்றும் பேட்டைச் சுழற்றி, விளையாடியது என அனைத்தும் அருமையாக இருந்தது. காயம் காரணமாக வெளியில் இருந்தது நன்றாக இருக்கவில்லை. ஆனால் இப்போது நான் தன்னம்பிக்கையைப் பெற்றதைப் போல உணர்கிறேன், வலுவாகவும் உணர்கிறேன், மேலும் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று பிரேவிஸ் தெரிவித்தார்.
டேவால்ட் பிரேவிஸின் வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கிறது. இளம் வீரர் ஆயுஷ் மகாத்ரேவின் ஆக்ரோஷ ஆட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன், பயமற்ற பாணியையும் பிரேவிஸ் வெகுவாகப் பாராட்டினார்.
பிரேவிஸ் மகாத்ரேவைப் பற்றி பேசுபோது, “மாத்ரே ஒரு சிறப்பு மிக்க வீரர், அவர் இளம் வயதுடையவர், ஆனால் அவர் விளையாடும் விதம் அலாதியானது. அவர் தன்னைத்தானே உண்மைத் தன்மையுடனும், மகிழ்ச்சியுடனும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதேபோல விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
“உங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும், ஆனால் அவர் விளையாடும் விதத்தைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது. அவர் அடிப்படையில் பந்துக்கு பந்து கவனத்தை வைக்கிறார். பந்து எங்கு செல்ல வேண்டுமோ அங்கு அடிக்கிறார்” என பிரேவிஸ் பாராட்டினார்.தற்போது 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக சனிக்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications