Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இது.. சிஎஸ்கே டீம் ரொம்ப பிஸியா இதைத் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்களா?

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19 அன்று தன் முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

முதல் போட்டியில் ஆட இருப்பதால் சிஎஸ்கே அணி கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் என நினைத்தால்.. ஏமாந்து போவீர்கள்.

ஆம், சிஎஸ்கே அணி ரொம்ப பிஸியாக வேறு வேலையில் ஈடுபட்டுள்ளது.

தாமதம்

தாமதம்

சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு ஒரு வாரம் தாமதமாகவே பயிற்சி செய்யத் துவங்கியது. துபாயில் குவாரன்டைனில் இருந்த போது சிஎஸ்கே முகாமில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.

மும்பை - சிஎஸ்கே

மும்பை - சிஎஸ்கே

ஒரு வார தாமதத்தால் மற்ற அணிகளை விட பின் தங்கினாலும் 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி பங்கேற்க உள்ளது. சென்ற சீசனின் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது சிஎஸ்கே.

2019 இறுதிப் போட்டி

2019 இறுதிப் போட்டி

கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன்னில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே. அந்தப் போட்டியுடன் 2019 சீசனை முடித்து வைத்த அதே சிஎஸ்கே - மும்பை 2020 ஐபிஎல் தொடரை துவங்கி வைக்க உள்ளன.

பயிற்சி செய்யவில்லை

பயிற்சி செய்யவில்லை

இந்தப் போட்டி அபுதாபியில் நடக்க உள்ளது. சிஎஸ்கே அணி அபுதாபியில் தற்போது தங்கி உள்ளது. அங்கே தீவிர பயிற்சி செய்வார்கள் என பார்த்தால் தீவிரமாக விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள் சிஎஸ்கே வீரர்கள். சமூக வலைதளங்களில் சிஎஸ்கே வீரர்களின் விளம்பர படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

சிக்கிய கேதர் ஜாதவ்

சிக்கிய கேதர் ஜாதவ்

சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கேதர் ஜாதவ்வை சுற்றி வளைத்து மற்ற வீரர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்த புகைப்படம் வெளியானது. அதற்கு சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையான கற்பனை சித்தரிக்கப்பட்டு இருந்தது.

யார் விசில் அடிப்பது?

யார் விசில் அடிப்பது?

அதில் தோனி என் கிளாஸில் யார் விசில் அடிப்பது? என ஆசிரியர் போல கேட்பதாகவும், அதற்கு சிஎஸ்கே வீரர்கள், கேதர் ஜாதவ் தான் என கை காட்டுவது போலவும் கூறப்பட்டு இருந்தது. இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது.

ருதுராஜ் கெயிக்வாட்

ருதுராஜ் கெயிக்வாட்

முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீளவில்லை என கூறப்படுகிறது. அவர் ரெய்னாவுக்கு பதிலாக அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக முன்னதாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 17, 2020, 18:09 [IST]
Other articles published on Sep 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+