
ஏராளமான ரசிகர்கள்
சிஎஸ்கே கேப்டன் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனிக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவர் குறித்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர்கள் வரலாறு போல கருதி கொண்டாடுகின்றனர்.

பேட்டிங் ஆர்டரை மேம்படுத்தும் கட்டாயம்
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியுற்று 7வது இடத்தில் உள்ளது. கடந்த 2010ல் கூட இதேபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்த சிஎஸ்கே, அந்த ஆண்டின் கோப்பையை கைபற்றியது. ஆயினும் இந்த ஆண்டில் சிஎஸ்கேவில் பேட்ஸ்மேன்கள் குறைவாக உள்ளதால் அதை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தோனி ரசிகரின் வீடு
இந்நிலையில் தோனியின் வெறித்தமான ரசிகர் ஒருவர் தான் கட்டியுள்ள வீட்டிற்கு தோனி ரசிகரின் வீடு என்று பெயரிட்டுள்ளார். மேலும் மஞ்சள் நிற வண்ணத்துடன் அந்த வீடு மிளிர்கிறது. தோனியின் பல்வேறு புகைப்படங்கள், அவரது ஜெர்சி, சிஎஸ்கே லோகோ போன்றவையும் சுவர்களில் வரையப்பட்டுள்ளது.

சிஎஸ்கே பாராட்டு
தமிழ்நாட்டின் அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவரே இந்த வித்தியாசமான செயலை செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. சிஎஸ்கேவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











