பாக்.கை ஆதரித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்... வைரல் வீடியோ..! சிஎஸ்கே விளக்கம் என்ன தெரியுமா?
Recommended Video
லண்டன்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி அணிந்த ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ வைரல் ஆகி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 266 ரன்களில் ஆல் அவுட்டாகி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

வைரல் சம்பவம்
பரபரப்பான இந்த போட்டியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி, சிஎஸ்கே நிர்வாகம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு சென்றுவிட்டது. அதாவது, போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே ரசிகர் ஆதரவு
அப்போது மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி அணிந்திருந்த ஒருவர் அதை பார்த்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த விடியோவை பதிவு செய்த ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டு விட்டார். கூடவே ஒரு கேள்வியையும் கேட்டிருந்தார்.

பரவிய வீடியோ
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்களே? அது ஏன்...? புரியவில்லையே...! என்று கேட்டிருந்தார். அவரின் கேள்வியோடு, வீடியோவும் தாறுமாறாக வைரலாகியது.
சிஎஸ்கே விளக்கம்
அதனால், விளக்கம் தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். தமது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விளக்கத்தையும் அளித்திருக்கிறது. அதில் சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருப்பதாவது: மைதானத்தில் இருந்தவர் பாகிஸ்தானை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications