Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருப்பதோ 40 ஆயிரம்.. விற்பதோ 3 ஆயிரம் ! சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி.. தோனியை பார்க்க முடியாதா?

சென்னை : ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்னும் 4 நாட்களில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு ஐபிஎல் தொடர் இந்தியாவில் Home மற்றும் Away என்ற பாணியில் போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெறுகிறது.

தோனிக்கு வயது 41 ஆவதால் இது அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால், கடைசியாக ஒரு முறை தோனியை சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

அகமதாபாத், மும்பை , பெங்களூரு போன்ற மைதானங்களில் சிஎஸ்கே விளையாடும் போட்டிக்கு டிக்கெட்கள் மளமளவென விற்று தீர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்ஜெட் டிக்கெட் விலையாக 1500 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலையாக 3000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் விற்பனை

குறைந்த அளவில் விற்பனை

வரும் மூன்றாம் தேதி லக்னோ சென்னை அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தேதி கவுண்ட்டரில் மட்டும் 1500 ரூபாய் டிக்கெட் விற்கப்படும். இதே போன்று 3000 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் மட்டும் விற்கப்படுகிறது. ஆனால் வெறும் சி, டி, இ மற்றும் ஐ, ஜே, கே ஆகிய பார்வையாளர்கள் கேலரிக்கு மட்டும் தான் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

ஆனால் மைதானத்தில் ஆடுகளத்திற்கு நேராக அமர்ந்து போட்டியை ரசிக்கக்கூடிய ஹெச். ஜி. எஃப் கேலரிகளில் டிக்கெட் ரசிகர்களின் விற்பனைக்கு வரவில்லை. இது சென்னை ரசிகர்களிடையே வேதனை அடைய செய்துள்ளது. 40 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 3 ஆயிரம் டிக்கெட் மட்டுமே ரசிகர்களுக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்பான்சர் டிக்கெட்டுகள்

ஸ்பான்சர் டிக்கெட்டுகள்

இதனால் மற்ற டிக்கெட்டுகள் ஸ்பான்சர்களுக்கு வழங்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்து பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கும் போது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து மைதானத்தில் உள்ள பெரும்பான்மையான இருக்கைகளுக்கு டிக்கெட் விற்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, March 27, 2023, 15:45 [IST]
Other articles published on Mar 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+