ஏன் எல்லோரும் டோணியின் "முரட்டு பக்தர்களாக" இருக்கிறார்கள் தெரியமா..?
சென்னை: மறக்க முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ்.. மறக்க முடியாது டோணி.. சென்னை சூப்பர் கிங்ஸும் இல்லை, டோணியும் இல்லை என்றாலும் சென்னை ரசிகர்களுக்கு இவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க நிறையவே மேட்டர் உள்ளது.
முதல் சீசனிலிருந்து இந்த ஆண்டு நடந்த 8வது சீசன் வரை ஒவ்வொரு தொடரிலும் டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் முத்திரை பதிக்கத் தவறியதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸை மட்டுமல்லாமல் பல இளம் வீரர்களையும் செதுக்கி செம்மைப்படுத்தியவர் டோணி.

- தனது அணியின் சிறந்த வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறாதவர் டோணி.
- சுரேஷ் ரெய்னாவை அவர் பயன்படுத்தியது போல வேறு யாரும் பயன்படுத்தியதில்லை.
- 2010ம் ஆண்டு தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதற்கு சதாப் ஜகாதிதான் முக்கியக் காரணம். அவரை அப்படி பயன்படுத்தினார் டோணி.
- அஸ்வினின் வளர்ச்சியில் டோணியின் பங்கு மிகப் பெரியது. அதனால்தான் டோணியின் முரட்டு பக்தராக இருக்கிறார் அஸ்வின்.
- உத்திகள் வகுப்பதில் டோணிதான் பெஸ்ட். இதை பல்வேறு சர்வதேச வீரர்களே வாயாரக் கூறி விட்டனர்.
- கடைசி பந்து வரைக்கும் நம்பிக்கையைக் கைவிடாதவர் டோணி. ஒரே பந்தில் கூட மாயம் செய்ய முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
- 2010 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் போலார்ட் பயங்கரமாக ஆடிக் கொண்டிருந்தபோது அவரை அழகாக வீழ்த்தி அசரடித்ததை யாரும் மறக்க முடியாது.
- 2011 தொடரின் இறுதிப் போட்டியில் அபாயகரமான கெய்லை அட்டகாசமாக வீழ்த்தியவர் டோணி. முதல் ஓவரையே அஸ்வினை வீசச் சொல்லி கெய்லை தூக்கினார் டோணி.
- சுரேஷ் ரெய்னா ஒரு நாள் போட்டிகளிலிருந்து கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்ட நிலையில் அவரது மறுவாழ்வுக்கு டோணி காட்டிய அக்கறையும், வழிகாட்டுதலுமே காரணம்.
- 2012 போட்டித் தொடரில் பெங்களூரில் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய சதிராட்டம் மறக்க முடியாது. கோரி ஆண்டர்சன் பந்தில் அவர் தூக்கிய இமாலய சிக்ஸரை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
- 20 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அவர் மலிங்கா பந்தில் அடித்த அபாரமான ஹெலிகாப்டர் ஷாட்டையும் ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாது. அந்தத் தொடரில் சென்னை உயிர்ப்புடன் இருக்க டோணியின் அந்த ஆட்டம்தான் உதவியது.
- கேப்டன்கள் வரலாம் போகலாம். ஆனால் புத்திசாலித்தனமா கேப்டன்கள் எப்போதாவதுதான் வருவார்கள். அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போக மாட்டார்கள். டோணி அந்த ரகம்.
Story first published: Tuesday, December 15, 2015, 15:36 [IST]
Other articles published on Dec 15, 2015


Click it and Unblock the Notifications