Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 360.. டெத் ஓவர்களில் யாக்கர்.. சிஎஸ்கே கண்டெடுத்த கருப்பு வைரம் மகாலா

டர்பன் : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணியில் சரியான வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி கையில் ஜேமிசனை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் காயம் காரணமாக வெளியேறியதால், மாற்று வீரராக சிசாண்டா மகாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யாருப்பா இவர், இவரை ஏன் சிஎஸ்கே அணியில் தேர்ந்து எடுத்தீர்கள் என்று பல ரசிகர்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர். ஆனால், இவரை பற்றி உங்களுக்கு தெரியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் அறிவுறுத்தினர்.

இமாலய சிக்சர்கள்

இமாலய சிக்சர்கள்

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் தாம் யார் என்று சிசாண்டா மகாலா ரசிகர்களுக்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்ய வந்த அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இரண்டு இமாலய சிக்சர்களை சர்வ சாதாரணமாக அடித்தார்.

360 ஸ்ட்ரைக் ரேட்

360 ஸ்ட்ரைக் ரேட்

இதனால் 5 பந்துகளை எதிர்கொண்ட சிசாண்டா மகாலா 18 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 360 ஆகும். அத்துடன் சிசாண்டா மகாலா தன்னுடைய ஆட்டத்தை நிறுத்தவில்லை. பந்துவீச்சிலும் தனது மேஜிக்கை காட்டினார்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் சிசாண்டா எதிரணி பேட்ஸ்மேன்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குகிறார். வெஸ்ட் இணடீஸ் அணி வீரர் பிராண்டன் கிங் அதிரடியாக விளையாடிய போது மகாலா அவரை போல்ட் ஆக்கினார். இதே போன்று டெத் ஓவர் வீச வந்த மகாலா, தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்

டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்

அண்மையில் சிசாண்டா, எஸ்ஏ 20 தொடரில் கூட அபாரமாக பந்துவீசி 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிஎஸ்கே அணி பிராவோவிற்கு பதில் ஆல்ரவுண்டரை தேடி வரும் நிலையில், மகாலா, சரியான மாற்று வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். எனினும் சிசாண்டா உடல் பருமனாக இருப்பதால் தோனி அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பாரா என தெரியவில்லை.

Story first published: Sunday, March 26, 2023, 15:02 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+