சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அருகே சென்னை சூப்பர் கிங்ஸுக்காக போராடிய "மஞ்சள் சட்டை" படை
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு காலம் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கூடி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேப்பாக்கம் மைதானத்தின் பட்டாபிராம் நுழைவாயில் அருகே கூடி இவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடையில் வந்திருந்த இவர்கள் அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட லோதா கமிட்டி தனது தீர்ப்பை சமீபத்தில் அறிவித்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

சென்னைக்கு 2 ஆண்டு தடை
மேலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய அணிக்கு ஏற்பாடு
இதையடுத்து இந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக புதிதாக 2 அணிகளை உருவாக்க கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறதாம். விரைவில் இதுதொடர்பான ஏலம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் போராட்டம்
இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அனுமதிக்க வேண்டும் என்று கோரி டோணியின் ரசிகரான சரவணன் என்பவர் இணையதளம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மஞ்சள் சட்டை படை
அவரது அழைப்பை ஏற்று பலர் கூடி நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். மஞ்சள் சீருடை அணிந்தும், உடலில் மஞ்சள் பெயிண்ட்டால் எழுதியும் ரகளையாக வந்திருந்தனர் இவர்கள்.

கையெழுத்து இயக்கம்
போராட்டத்தின்போது அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இந்த கையெழுத்துப் போட்ட பிரதியை சுப்ரீ்ம் கோர்ட்டுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அனுப்பி வைக்கவுள்ளனராம். இதுவரை 7000 பேர் கையெழுத்து போட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications