Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங் சிஎஸ்கே-ல சேரணும்.. தோனியோட ஆடணும்.. ரசிகர்கள் ஆசை நிறைவேறுமா?

சென்னை : ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் சிஎஸ்கே அணி தன் ரசிகர்களிடம் எந்த வீரரை ஏலத்தில் வாங்கலாம் என கேள்வி கேட்டு இருந்தது.

அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் யுவராஜ் சிங் என பதில் அளித்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

யுவராஜ் சிங் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்ககது.

காலி இடங்களை நிரப்ப ஏலம்

காலி இடங்களை நிரப்ப ஏலம்

ஐபிஎல் அணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2019 சீசனில் பங்கு பெறுவார்கள்.

எத்தனை வீரர்கள்?

எத்தனை வீரர்கள்?

இந்த ஏலத்தில் 346 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் சுமார் 226 பேர் இந்திய வீரர்கள். இதில் இந்திய அணியில் ஆடும் ஷமியும் அடக்கம். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

சிஎஸ்கே கேட்ட கேள்வி

இந்த நிலையில், சிஎஸ்கே அணி எந்த வீரரை இந்த ஏலத்தில் வாங்கலாம் என கேட்டுள்ளது. ஐபிஎல் இணையதளத்தில் ரசிகர்கள் ஓட்டு போட்டு இதை தெரியப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங் தான் வேண்டும்

யுவராஜ் சிங் தான் வேண்டும்

சிஎஸ்கே ரசிகர்களால் அந்த தளத்திலும், ட்விட்டரிலும் அதிகம் கூறப்பட்ட பெயர் யுவராஜ் சிங் தான். யுவராஜ் சிங் தோனியுடன் சேர்ந்து ஆடுவதை காண ஏராளமான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இது சாத்தியமா?

இது சாத்தியமா?

ஆனால், யுவராஜ் சிங் தற்போது பார்ம் அவுட்டில் இருக்கிறார். ரஞ்சி தொடரிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை யுவராஜ். ரசிகர்கள் ஓட்டுப் போட்டாலும் யுவராஜ் சிங்கை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்குமா என்பது சந்தேகமே!!

Story first published: Friday, December 14, 2018, 17:56 [IST]
Other articles published on Dec 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+