Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் விலகல்.. மீண்டும் அதே மாதிரியா?

சென்னை : 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடர் தொடங்க இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.

கடந்த சீசனில் எப்படி முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடாமல் போனார்களோ, அதே போல் இம்முறையும் சிஎஸ்கே அணி நடைபெறுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே 2 முக்கிய வீரர் காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரர் இணைந்துள்ளார்.

ருத்துராஜ் காயம்

ருத்துராஜ் காயம்

சென்னை அணியில் ஏற்கனவே தொடக்க வீரர் ரூத்துராஜ் கெய்க்வாட் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். தற்போது, அவர் காயத்திலிருந்து குணமடைந்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ருத்துராஜ பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

தீபக் சாஹர் காயம்

தீபக் சாஹர் காயம்

இதே போன்று ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சிஸ்கே அணி வாங்கியது. ஆனால் , அவர் கடந்த சீசனில் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், இம்முறையும் அவர் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

ஜெமிசனுக்கு காயம்

ஜெமிசனுக்கு காயம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்றால் டுவைன் பிரிட்டோரியஸ், மதிஷா பதிராணா மற்றும் கெயில் ஜெமிசன் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர். இதில் நியூசிலாந்து வீரர் ஜெமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கேக்கு சிக்கல்

சிஎஸ்கேக்கு சிக்கல்

இதனால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜெமிசன் விலகி உள்ளார். இதனையடுத்து ஜெமிசனுக்கு பதில் வேறு ஏதேனும் வெளிநாட்டு வீரரை வாங்கும் நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. இதனால் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வரவில்லை என்றால் சிஎஸ்கே அணிக்கு பெரும் சிரமம் காத்துள்ளது.

Story first published: Tuesday, February 14, 2023, 12:17 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+