Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ ஒரு வீரனா இருந்தா உள்ளே வா! கிண்டல் செய்த ரசிகர்..! கிளின் போல்ட் ஆக்கிய சிஎஸ்கே வீரர் தேஷ்பாண்டே

சென்னை : ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான முதல் குவாலிபையர் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே 43 ரன்கள் விட்டு கொடுத்தார். இதனால் குஜராத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டிய அந்த அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோற்றது.

இந்த தொடரில், சிஎஸ்கே அணியில் சர்வதேச அனுபவம் பெரிய அளவில் இல்லாத வீரர்களை தான் வைத்து கொண்டு, தோனி இறுதிப் போட்டி வரை சென்னை அணியை கொண்டு வந்திருக்கிறார். தேஷ்பாண்டே பெரிய அளவில் அனுபவம் இல்லை என்றாலும் முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கேக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்கிறார்.

CSK Fast bowler Tushardeshpande slams fans for trolling his bowling

ஆனால் தேஷ்பாண்டே வில சமயம் ரன்களை வாரி வழங்குவதும் வழக்கம். இந்த சீசனில் கூட தேண்பாண்டே 15 போட்டியில் களமிறங்கி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், தேண்பாண்டேவுக்கு உரிய மரியாதையை சிஎஸ் ரசிகர்கள் கொடுப்பதில்லை.

குஜராத்துக்கு எதிராக முதல் குவாலிபையரில் தேஷ்பாண்டே 43 ரன்களை வழங்கியதை அடுத்து, அவரை ரன் வழங்கும் மிஷின் என்று சமூக வலைத்தளத்தில் கலாய்த்து இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் தேஷ்பாண்டே 40 ரன்களுக்கு மேல் கொடுத்து வருவதாகவும் ரசிகர்கள் சாடினர்.

இதனால் கடுப்பான தேண்பாண்டே ரசிகருக்கு சரி சமமாக இறங்கி டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உனக்கு திராணி இருந்தால், களத்துக்கு வந்து பார். அதன் பிறகு விமர்சனம் செய், நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், நான் சவால் விடுகிறேன் உன்னால் அந்த எல்லைக்கோட்டை கூட தாண்டி வர முடியாது என்று கூறியுள்ளார்.

தேஷ்பாண்டேவின் இந்த பதில் தேவையற்றது என்றும் ரசிகர்கள் ஆயிரம் சொல்வார்கள். அதை எல்லாம் காதில் போட்டு கொள்ள கூடாது என்றும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். கிரிக்கெட் விளையாடினால் மட்டும் தான் விமர்சனம் செய்யலாமா, இது என்ன நியாயம் என்றும் பலரும் தேஷ்பாண்டேவை போட்டு கும்மி வருகின்றனர்.

Story first published: Friday, May 26, 2023, 16:28 [IST]
Other articles published on May 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+