Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே முன்னாள் பயிற்சியாளரை இங்கிலாந்துக்கு இழுத்த பிளமிங்.. பலமான தளபதி படை ரெடி

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக , சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான எரிக் சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பிரெண்டன் மெக்கல்லம் கடந்த ஜூலை மாதம் அப்பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஸ்டீபன் பிளெமிங் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2009 முதல் 2026 வரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பிளெமிங் உடன் எரிக் சிம்மன்ஸ் மீண்டும் இணையவுள்ளார்.

Eric simmons

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குடன் டாசன், மார்கஸ் டிரெஸ்கோதிக், ஜேம்ஸ் பாஸ்டர் மற்றும் எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் அடங்கிய பயிற்சிக் குழு செயல்படும். அதேவேளையில், வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் சாரா கெய்லர், ஜீதன் படேல், டிம் சௌதி ஆகியோர் பயிற்சிக் குழுவிலும், கெவின் பீட்டர்சன் வழிகாட்டியாகவும் செயல்படுவர்.

IND vs WI: அபிஷேக் சர்மா 5 பந்துகள் தாண்டினால், எதிரணி கதை முடிந்தது- புஜாரா பாராட்டு

IND vs WI: அபிஷேக் சர்மா 5 பந்துகள் தாண்டினால், எதிரணி கதை முடிந்தது- புஜாரா பாராட்டு

வரவிருக்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து தொடரிலிருந்து இந்தப் புதிய பயிற்சிக் குழுக்கள் செயல்படத் தொடங்கும். 64 வயதான எரிக் சிம்மன்ஸ், 1994 பிப்ரவரி முதல் 1995 பிப்ரவரி வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தென்னாப்பிரிக்க அணிக்காக 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் 123 முதல்தரப் போட்டிகளிலும், 193 லிஸ்ட்-ஏ போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2000களின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக குறுகிய காலம் பணியாற்றிய இவர், 2003 ஒருநாள் உலகக்கோப்பையின் போதும் அந்தப் பொறுப்பில் இருந்தார். பின்னர், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏழு சீசன்கள் பயணித்துள்ள சிம்மன்ஸ், சிஎஸ்கே அணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். எஸ்ஏ20 தொடரில் சிஎஸ்கேவின் சகோதர அணியான ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

Also Read

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

2026 டிசம்பர் முதல் 2027 ஜனவரி வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியுடனான தனது புதிய பயணத்தை அவர் தொடங்குகிறார்.

Story first published: Monday, October 12, 2026, 18:52 [IST]
Other articles published on Oct 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+