For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராவோக்கு வயதானால், உத்தப்பா மட்டும் ஏன்?.. ரசிகர்களிடம் நீங்காமல் இருந்த கேள்வி.. சிஎஸ்கே விளக்கம்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. மினி ஏலமான இது கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாருமே எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுத்திருந்தது.

சிஎஸ்கே பட்டியல்

சிஎஸ்கே பட்டியல்

சென்னை அணியில் இருந்து சீனியர் வீரர் அம்பத்தி ராயுடு ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்தார். இது போதாது என்பது போல நட்சத்திர வீரர் டுவைன் பிராவோவை கழட்டிவிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதே போல கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே உள்ளிட்ட வீரர்களும் விடுவித்திருந்தனர். எந்தவித ஓய்வும் அறிவிக்காத பிராவோவை நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கேவின் விளக்கம்

சிஎஸ்கேவின் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில், டுவைன் பிராவோ சிறந்த வீரர் தான், ஆனால் அவரின் வயதை கருத்தில் கொண்டு தான் அணியில் இருந்து நீக்கியுள்ளோம். 39 வயதாகும் பிராவோ இனியும் சிறப்பாக விளையாடுவாரா என்பதில் தோனிக்கு சந்தேகம் உள்ளது என்ற வகையில் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

 ஏன் ராபின் உத்தப்பா?

ஏன் ராபின் உத்தப்பா?

வயதை காரணம் காட்ட வேண்டுமென்றால் ராபின் உத்தப்பா-க்கு மட்டும் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் அம்பத்தி ராயுடுவுக்கு 37 வயது ஆகிவிட்டது. இதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், கேப்டன் தோனி ராபின் உத்தப்பா மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறோம் எனக்கூறியுள்ளார்.

 மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

ஏலத்திற்கு விடப்பட்டுள்ள டுவைன் பிராவோவை, மற்ற அணிகளும் ஏலம் எடுப்பது சற்று சந்தேகமான ஒன்று தான். எனவே யாரும் வாங்காத பிராவோவை மிகவும் குறைந்த விலையில் கூட சிஎஸ்கே எடுத்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தோனிக்கு பல இக்கட்டான சூழலில் உதவியவர் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 16, 2022, 16:46 [IST]
Other articles published on Nov 16, 2022
English summary
CSk CEO Kasi viswanathan Gives a explanation over Dwayne Bravo's removal ahead of IPL 2023 Auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+