Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ் அணியை ஒருகை பார்த்த சிஎஸ்கே... புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்

துபாய் : சிஎஸ்கேவின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து 7வது இடத்தில் இருந்த சிஎஸ்கே ஒரு இடம் மேலே சென்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

CSK Go 6th After Beating SunRisers Hyderabad By 20 Runs in the IPL 2020 points table

எஸ்ஆர்எச் மற்றும் சிஎஸ்கே அணிகள் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் புள்ளிகள் அடிப்படையில் எஸ்ஆர்எச் அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிஎஸ்கேவின் வெற்றி நேற்றைய தினம் அரங்கேறியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடன் விளையாடி அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பரபரப்பான அந்த ஆட்டத்தின் வெற்றியை அடுத்து தற்போது சிஎஸ்கே அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளது.

எஸ்ஆர்எச் மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டுமே இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், புள்ளிகள் அடிப்படையில் எஸ்ஆர்எச் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் 10 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

Story first published: Wednesday, October 14, 2020, 10:58 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+