Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு வந்த தலைவலி.. எடுபடாமல் போன தோனியின் கணக்கு.. ப்ளேயிங் 11ல் ஆப்பு இருக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளேயிங் 11ல் பெரிய குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் முதலில் அமைதிகாத்த சென்னை அணி இந்த முறை 75 சதவீதம் வரை இளம் வீரர்களாக ஏலம் எடுத்துள்ளது.

இதனையடுத்து வரும் மார்ச் 8ம் தேதி முதல் பயிற்சி முகாமை தொடங்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. தோனியும் அதற்காக வரவுள்ளார்.

தீபக் சஹார்

தீபக் சஹார்

ஆனால் இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார், ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் எனத்தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அவருக்கு தசைநார் கிழிவு ஏற்பட்டது. இது சரியாக குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஆகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனியின் ப்ளான்

தோனியின் ப்ளான்

இவருக்கு மாற்றாக சிஎஸ்கேவில் வேறு பவுலர்கள் இருக்கலாம். ஆனால் அங்கு தான் பிரச்சினையே உள்ளது. அதாவது வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் தீபக் சஹாரை வைத்து தான் தோனி பெரிய கணக்கு போட்டுள்ளார். இதன் காரணமாக தான் அவரை அதிகபட்சமாக ரூ.14 கோடி கொடுத்து அந்த அணி வாங்கியது.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

இவருக்கு மாற்று வீரரை தேடலாம் என்று பார்த்தால், அனைவருமே ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லாத வீரர்கள். அவர்களுக்கு தோனி கற்றுக்கொடுத்து, ஆட்டத்தை புரிந்துக்கொள்வதற்குள் சிஎஸ்கே அணி பாதி ஆட்டங்களில் சொதப்பிவிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அயல்நாட்டு வீரர்கள் எங்கு?

அயல்நாட்டு வீரர்கள் எங்கு?

சிஎஸ்கேவில் அனுபவ பவுலர்கள் என்று பார்த்தால், டுவைன் பிராவோ, ப்ரிடோரியஸ், ஆடம் மில்னே என அயல்நாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மூவரையும் களமிறக்கினால் பேட்டிங்கில் மொயின் அலி - கான்வே வை களமிறக்குவதில் சிக்கல் உருவாகும். இதனால் சிஎஸ்கே ஒன்று இளம் பவுலர்களை வைத்து தான் ஆடியாக வேண்டும். இல்லையென்றால் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

Recommended Video

IPL 2022-க்கு இப்போதே தயாராகும் CSK.. வீரர்களுக்கு சென்ற அவசர அழைப்பு
சிறந்த தீர்வு

சிறந்த தீர்வு

அதன்படி பார்த்தால் ஓப்பனிங்கிற்கு ருதுராஜ் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கலாம். மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி, ஜடேஜா, தோனி ஆகியோர் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும். பவுலிங்கில் முழுவதுமாக அயல்நாட்டு வீரர்களை களமிறக்கிக் கொள்ளலாம். இது தோனியின் முடிவை பொருத்துதான் உள்ளது.

Story first published: Tuesday, February 22, 2022, 18:21 [IST]
Other articles published on Feb 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+