Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சிஎஸ்கே மீதான ஆர்வத்தை இழந்த ரசிகர்கள்.. வரிசையாக விழும் அடி.. ஆயுஷ், தோனி.. யாருமே இல்லை!

சென்னை: சிஎஸ்கே அணிக்கு இந்த 2026 ஐபிஎல் சீசன் ஒரு மாபெரும் சோதனையாகவே மாறியுள்ளது. ஏற்கனவே தொடர் தோல்விகள், முக்கிய வீரர்களின் காயங்கள் என தவித்து வரும் நிலையில், தற்போது அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு இனி வரும் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

ஏதேனும் ஒரு எதிர்பாராத திருப்புமுனை நிகழ்ந்தால் மட்டுமே இந்த சீசனில் சிஎஸ்கே அணி மீண்டு வர முடியும் என்ற விரக்தி நிலைக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு பேட்டிங்கில் மிகப்பெரிய பலமாக அமைந்தது 18 வயதான ஆயுஷ் மாத்ரே ஆட்டம் தான். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய அவர் 201 ரன்களைக் குவித்து அணியின் டாப் பேட்ஸ்மேனாக வலம் வந்தார். குறிப்பாக 177 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன் குவித்தது பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு அதிரடியான ரன் குவிப்பை அளித்தது.

CSK in trouble Top Chennai Super Kings batsman Ayush Mhatre Ruled Out of IPL 2026 which is a Major Setback

கடந்த ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரது தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு 6 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வும் தீவிர சிகிச்சையும் தேவைப்படுவதால், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளார்.

இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அகமது, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் வெளியேறிவிட்டனர். தோனியும் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருந்தாலும், எல்லா போட்டிகளிலும் ரன் குவிப்பதில்லை.

மற்ற பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அவர்கள் சில போட்டிகளில் ரன் சேர்த்தாலும், தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகின்றனர். எனவே ஆயுஷ் மாத்ரே இல்லாத நிலையில் பேட்டிங் வரிசை பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து பின்தங்கி வரும் சிஎஸ்கே அணிக்கு, இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

கடந்த 2025 சீசனிலும் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மிக மோசமாக வெளியேறியது. இதனால் இந்த 2026 சீசனிலாவது மீண்டு வந்து கோப்பையை வெல்லும் என ஆவலோடு காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு, இந்த தொடர் காயங்களும் சொதப்பலான ஆட்டமும் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளன.

ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே ஏதாவது ஒரு கட்டத்தில் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வரும் என்ற பழைய நம்பிக்கை இம்முறை முற்றிலும் தகர்ந்துவிட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் கூட பழைய ஆதிக்கத்தை அணியால் செலுத்த முடியவில்லை. எஞ்சிய போட்டிகளில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.

Story first published: Wednesday, April 22, 2026, 10:46 [IST]
Other articles published on Apr 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+