சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கு.. மீண்டு வருவது கடினம்.. EX வீரர்கள் கருத்து
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பான ஃபார்மில் இருந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக விலகியது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
18 வயதான ஆயுஷ் மாத்ரே, தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகினார். நடப்பு சீசனில் CSK அணிக்காக ஆறு இன்னிங்ஸ்களில் 201 ரன்கள் குவித்துள்ளார். அவரது Average 33.50 ஆகவும், Strike Rate 177.87 ஆகவும் இருந்தது. இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 43 பந்துகளில் 73 ரன்களும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 59 ரன்களையும் மகாத்ரே அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெறும் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், "ஆயுஷ் மாத்ரே ஆடிய வேகம் மிக முக்கியம். அவர் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். அவருக்குப் பதிலாக வருபவர் திடீரென களமிறங்குபவருக்கு சிரமம் இருக்கும்."
"ஒரு ஆட்டத்தின் போக்கை மாற்ற ஐந்து ஓவர்கள் போதும், அதை மாத்ரே செய்வார். ஒரு சில ஓவர்களுக்குள்ளேயே, எதிரணி ஆட்டக் கட்டுப்பாட்டை இழந்து, 'ஐயோ! நாம் பின்தங்கிவிட்டோமே' என உணர வைப்பார். அவரை ஈடுசெய்வது கடினம், பல கேள்விகள் எழுகின்றன," என மாத்ரேவின் அதிரடி பேட்டிங் பாணியை ஸ்டெய்ன் பாராட்டினார்.
முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், மாத்ரேவுக்கு மாற்றாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது CSK அணிக்கு சிக்கலானது. வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவும் காயம் காரணமாக விலகியிருப்பது இந்தச் சூழலை மேலும் சவாலாக்குகிறது என்றார்.
"இது வெறும் ஒரு பேட்ஸ்மேனை மற்றொரு பேட்ஸ்மேனால் மாற்றுவது போன்றதல்ல. சஞ்சு சாம்சன் சதம் அடித்திருந்தாலும், மாத்ரே ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடர்ச்சியாக ரன் குவித்தார், எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தார் அதிரடியாக!"
"கலீல் இல்லாததால், மாத்யூ ஷார்ட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவதும் எளிதல்ல. சென்னை அணிக்கு வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்கள் அவசியம். நூர் அஹமது ஃபார்முக்கு வந்துள்ளார். புதிய பந்து வீச்சாளராக அகீல் ஹுசைன் தேவைப்படலாம். ஜேமி ஓவர்டன் அற்புதமாக செயல்பட்டு, சில ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார். இவர்களின் சிறந்த செயல்பாடுகளால், ஷார்ட் அணிக்குள் வருவது கடினமாகிறது," என்று முடித்தார்.
ஜேமி ஓவர்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை (சராசரி 17.87, எகானமி 9.53) வீழ்த்தியுள்ளார். அன்ஷுல் கம்போஜ் 13 விக்கெட்டுகளுடன் (சராசரி 16.23, எகானமி 9.73) அணியின் முன்னணி விக்கெட் வீச்சாளராகத் திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications