Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே சோலி முடிந்தது.. குண்டை தூக்கிப் போட்ட மைக்கேல் ஹஸ்ஸி.. ஒழுங்காக ஆடி வந்த ஆயுஷ் அவுட்?

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை சிறப்பாக ஆடி வந்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே காயமடைந்து இருந்தார். அவரால் தொடர்ந்து வரும் போட்டிகளில் ஆட முடியுமா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில், அவரது காயம் குறித்து மோசமான தகவல் கிடைத்துள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில், வெற்றி இலக்கை நோக்கி சிஎஸ்கே விளையாடியது. அப்போது 3-வது வரிசையில் களமிறங்கிய 18 வயதான இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, மிகவும் சிறப்பாக ஆடி 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் நடுவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து 2-வது ரன் எடுக்க மின்னல் வேகத்தில் ஓடியபோது, ஆயுஷ் மத்ரேவின் இடது காலில் பலமான தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

CSK IPL 2026 Ayush Mhatre injury update Coach Confirms Serious Injury

வலியால் துடித்த அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் வலியால் அவரால் சரியாக ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஆடிய அவர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அவர் பிசியோதெரபிஸ்ட் தைபுன் சிம்செக் மற்றும் சக வீரர் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோரின் உதவியுடன் மைதானத்தை விட்டு மிகவும் சோகமாக வெளியேறினார்.

இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறுகையில், "ஆயுஷ் மத்ரேவுக்கு காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. காயம் எந்த அளவுக்குத் தீவிரமானது என்பதை அறிய ஸ்கேன் செய்யப்பட உள்ளது. ஆனால், நிலைமையைப் பார்த்தால் காயம் மிகவும் மோசமாகவே தெரிகிறது. அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்ததால், இது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், மாற்று வீரருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்" என்று கவலையுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே பல முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஃபார்மில் உள்ள ஆயுஷ் மத்ரேவின் இந்த காயம் சிஎஸ்கே நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி தனது அடுத்த போட்டியில் 4 நாட்கள் கழித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், ஆயுஷ் மத்ரேவுக்குப் பதிலாக மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்படக்கூடிய அதிரடி வீரர் உர்வில் படேல் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Sunday, April 19, 2026, 12:03 [IST]
Other articles published on Apr 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+