For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK அணியில் அஸ்வின் மட்டுமல்ல, பல முன்னணி வீரர்களை வெளியே அனுப்ப திட்டம்.. இவரும் போறாரா?

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பத்தாவது இடத்தில் நிறைவு செய்து படுதோல்வியை தழுவியது. அந்த தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. ஆனால் தொடரில் இறுதியில் சில முன்னணி வீரர்கள் காயம் அடைந்ததால், இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் பிரவீஸ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். இதனால் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அடுத்த சீசனுக்கும் தக்க வைத்துக்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.

CSK

இதனால் பல முன்னணி வீரர்களை அணியை விட்டு அனுப்ப சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அது என்னவென்று தற்போது பார்க்கலாம். மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு சில வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் அதற்கு பணத்தை வைத்துக் கொள்வதற்காக சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி முதல் வீரராக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியேற உள்ளார். அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட நிலையில் அவரே அணியை விட்டு செல்வதாக கூறியிருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து வீரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்த்ரா என இருவரையும் சிஎஸ்கே வெளியே அனுப்பவுள்ளது. கான்வேவை 6 கோடியே 25 லட்சம் ரூபாயும், ரச்சின் ரவீந்திராவை 4 கோடியும் சிஎஸ்கே கொடுத்திருந்தது.

அதேபோன்று பெரிதும் நம்பி சிஎஸ்கே ஏமாற்றம் அடைந்த ராகுல் திருப்பாதியையும் சிஎஸ்கே வெளியே அனுப்பவுள்ளது. ராகுல் திருப்பாதி 3 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே வாங்கி இருந்தது. இதேபோன்று 2 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட குர்ஜ்பனீத் சிங்கும், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட தீபக் ஹூடாவும், ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஜெமி ஓவர்டனும், ஒரு கோடியே இருவது லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட விஜய் சங்கர் ஆகியோரை சிஎஸ்கே அணி வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 35 கோடி ரூபாய் மிச்சம் அடையலாம். அதுமட்டுமில்லாமல் மினி ஏலத்திற்காக கூடுதல் 5 கோடி ரூபாய் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும் என்பதால் சிஎஸ்கே அணியின் கையிருப்பு தொகை 40 கோடி ரூபாயுடன் மினி ஏலத்தில் சிஎஸ்கே தேர்வு செய்யும். சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்வதற்கு ராஜஸ்தான் அணி, சிஎஸ்கே விடமிருந்து இரண்டு முக்கிய வீரர்களை கேட்கிறது.இதனால் சஞ்சு சம்சனை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்பதற்காக இந்த முடிவை சிஎஸ்கே எடுத்து இருக்கிறது.

Story first published: Saturday, August 9, 2025, 18:09 [IST]
Other articles published on Aug 9, 2025
English summary
CSK is all set to Release seniors Players ahead of IPL 2026 Mini auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+